ஓடிடி-யில் ரிலீசாகிறதா பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' ?

Published : Jun 29, 2021, 11:56 AM IST
ஓடிடி-யில் ரிலீசாகிறதா பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' ?

சுருக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'விக்ரம்' படத்தில் உலகநாயகனுக்கு 4 ஆவது வில்லனாக அவதாரம் எடுக்கும் பிரபல ஹீரோ! யார் தெரியுமா?
 

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, விரைவில் டிரைலர் வெளியாக போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக, 'சார்பட்டா' படத்தின் மேக்கிங் வீடியோவை கடந்த மார்ச்சு மாதம் வெளியானது.இந்த வீடியோவில் ஒவ்வொருவருடைய கதாப்பாத்திரம் குறித்தும், படக்குழு விளக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், எவ்வளவு கடுமையாக படத்திற்காக உழைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

மேலும் செய்திகள்: காதலர் விக்னேஷ் சிவனை இறுக்கி அணைத்தபடி நயன்தாரா... தாறுமாறு வைரலாகும் செல்ஃபி போட்டோஸ்...!

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகிவரும் நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தையும் தற்போது துவங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையரங்கில் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது படக்குழுவின் முடிவு. எனினும் இதுகுறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: இப்படியெல்லாம் செய்யாதீங்க... ரசிகர்களை எச்சரித்த ராஷ்மிகா மந்தனா...!
 

பிரமாண்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்தில், படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், துஷாரா, காளி வெங்கட், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.முரளி ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார், சண்டை இயக்குனராக அன்பறிவு முக்கிய பங்கு வகித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!