புதிய படத்தின் அப்டேட் கொடுத்த பா ரஞ்சித் – டைட்டில் வெளியீடு!

By Rsiva kumar  |  First Published Dec 29, 2024, 6:31 PM IST

Pa Ranjith Dinesh Next Movie Title Announced : இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.


Pa Ranjith Dinesh Next Movie Title Announced : அட்டகத்தி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் பா ரஞ்சித். தனது முதல் படத்தில் தினேஷ், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா, கலையரசன், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு தான் கார்த்தி, கலையரசன், ரித்திகா, கேத்ரின் தெரெசா ஆகியோர் நடிப்பில் வெளியான மெட்ராஸ் படத்தை கொடுத்தார். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் இயக்குநர் பா ரஞ்சித்தை அடுத்த கட்டத்தை கொண்டு சென்றது.

விடாமுயற்சி சவகீதா என்றால் மலாய், தாய் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ஆண்டனி தாசன் விளக்கம்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் கொடுத்த வரவேற்பு சார்பட்டா பரம்பரை, விக்டிம், நட்சத்திரம் நகற்கிறது, தங்கலான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது புதிய படத்தின் அப்டேட் ஒன்றையும் கூறியிருக்கிறார். அதன்படி தினேஷ், ஆர்யா, அசோக் செல்வன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்திற்கு வேட்டுவம் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆர்யா வில்லனாகவும், தினேஷ் ஹீரோவாகவும் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலமாக பா ரஞ்சித் மற்றும் தினேஷ் இருவரும் 3ஆவது முறையாக இணைந்துள்ளனர். இதற்கு முன்னதாக அட்டகத்தி, கபாலி ஆகிய படங்களில் தினேஷ் நடித்துள்ளார். அதிக பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தினேஷ் நடிப்பில் உருவான லப்பர் பந்து கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. மிகவும் எளிமையான கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, காளி வெங்கட், சாஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ரகுவரன் – கமல் ஹாசன் ஏன் ஒன்றாக நடிக்கவில்லை: நாயகன் ரகுவரனுக்கான படமா?

கிரிக்கெட், காதல், செண்டிமெண்ட், குடும்பம் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் கொடுத்த வரவேற்பு தினேஷை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாண்டகாரண்யம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 3ஆவது முறையாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இதே போன்று தான் ஆர்யாவும் சினிமாவில் காலூன்ற போராடி வரும் ஆர்யாவிற்கு இதுவரையில் அவரைப் பற்றி பேசும் கதை கிடைக்கவில்லை. நான் கடவுள், மதராஸபட்டிணம், ராஜா ராணி ஆகிய படங்கள் ஆர்யாவிற்கு டர்னிங் பாய்ண்டாக அமைந்தது. தற்போது மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது பா ரஞ்சித் படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SK25 படத்தில் ஏன் நடிக்க ஒத்துக் கொண்டேன் தெரியுமா? காரணத்தை சொன்ன அதர்வா!

சமீபத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவான எமக்கு தொழில் ரொமான்ஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, அபிராமி, நாசர், சேத்தன், வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிகிறது.

click me!