இது பிக் பாஸ் வீடா இல்ல சினிமா தியேட்டரா? அமரனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட புதுப்படம்

Published : Dec 29, 2024, 03:16 PM IST
இது பிக் பாஸ் வீடா இல்ல சினிமா தியேட்டரா? அமரனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட புதுப்படம்

சுருக்கம்

பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த சீசனில் அமரன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு புதுப்படத்தை ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பான புதுப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எந்தவித வெளியுலக தொடர்பும் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதில் ஏதேனும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆனால் அதை புரமோட் செய்ய படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். கடந்த 7 சீசன்களாக இது நடந்தது. ஆனால் இந்த சீசனில் ஒருபடி மேலே போய், படத்தை புரமோட் செய்யும் விதமாக முழு படத்தையும் பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

முதன்முறையாக அமரன்

முன்னதாக அமரன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனபோது அப்படத்தை போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பினார்கள். அதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் தற்போது ஒரு படி மேலே போய், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் புதுப்படம் ஒன்றை பிக் பாஸ் போட்டியாளர்களுக்காக பிரத்யேகமாக ஒளிபரப்பி உள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இது பிக் பாஸ் வீடா இல்லை சினிமா தியேட்டரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விடுதலை 2 படம் பார்த்த போட்டியாளர்கள்

அமரன் படத்தை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பப்பட்ட படம் வேறுதுவுமில்லை விடுதலை 2 தான். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி நடித்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போட்டியாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. இதைப்பார்த்த போட்டியாளர்கள் மறுநாள் விஜய் சேதுபதியிடம் படத்தை பற்றிய தங்கள் விமர்சனத்தை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக மிகவும் புரட்சிகரமான படமாக இருக்கிறது என அவர்கள் கூறினர்.

காரணம் என்ன?

விடுதலை 2 திரைப்படம் பிக் பாஸ் வீட்டில் திரையிடப்பட்டதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. அப்படம் போகப் போக வசூலில் மந்தமாகி உள்ளதால் அதை பிக் அப் செய்யும் முயற்சியாக அப்படத்தை பிக் பாஸ் வீட்டில் ஒளிபரப்பி புரமோட் செய்திருக்கிறார்கள். படக்குழுவின் இந்த யுக்தி எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸில் பிரதீபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விடுதலை 2 திரைப்படம் இதுவரை 40 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் 8ல் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் அவரு இல்லையாம், இவராம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!