சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! அதுக்குன்னு இவ்வளவா?

By Ganesh A  |  First Published Dec 29, 2024, 2:18 PM IST

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை ருசித்த பிரதீப், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கினார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. இப்படத்துக்கு பின் பிரதீப்புக்கு ஹீரோவாக நடிக்க சான்ஸ் குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், செவன் ஸ்கிரீன் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... மாறுபட்ட வேடங்கள்; பிரதீப்பின் Dragon படத்தில் அசத்த வரும் 3 டக்கர் இயக்குனர்கள் - வைரல் பிக்ஸ்!

இதுதவிர நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் டிராகன். இப்படத்தை ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படத்தில் யூடியூப் பிரபலங்கள் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், டிராகன் படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இப்படத்திற்காக ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆன நிலையில், அதற்குள் பிரதீப் ரங்கநாதன் தன் சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை இப்படம் ஹிட் ஆனால் அவர் தன் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... 'LIK 'படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்த மாஸ் ஹீரோ! பிரதீப் உள்ளே வந்தது எப்படி தெரியுமா?

click me!