விடாமுயற்சி சவகீதா என்றால் மலாய், தாய் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ஆண்டனி தாசன் விளக்கம்!

Published : Dec 29, 2024, 04:04 PM IST
விடாமுயற்சி சவகீதா என்றால் மலாய், தாய் மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? ஆண்டனி தாசன் விளக்கம்!

சுருக்கம்

Vidaamuyarchi First Single Sawadeeka Lyric Meaning :  விடாமுயற்சி படத்தில் வெளியான சவகீதா என்றால் தாய் மொழியில் அதனுடைய அர்த்தம் என்ன என்பது குறித்து பின்னணி பாடகர் ஆண்டனி தாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Vidaamuyarchi First Single Sawadeeka Lyric Meaning : இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. கிட்டதட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.தனது காணாமல் போன மனைவியை தேடி ஒரு மோசமான பாலைவன பகுதிக்கு செல்லும் ஹீரோ, அங்கு ஆபத்தான குண்டர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார். தனது காணாமல் போன மனைவியை கண்டுபிடித்தாரா? குண்டர்களிடமிருந்து தப்பித்தாரா இல்லையா என்பது தான் படத்தோட மீது கதை. 2024 ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகாதது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ரகுவரன் – கமல் ஹாசன் ஏன் ஒன்றாக நடிக்கவில்லை: நாயகன் ரகுவரனுக்கான படமா?

இருந்தாலும் அதற்கு பதிலாக இப்போது 2 படங்களில் நடித்துள்ளார். அதில் குட் பேட் அக்லி வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியாகிறது. இதே போன்று விடாமுயற்சி படமும் 2025 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், தேதி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

அஜித்தை திரையில் பார்க்கவில்லை என்றாலும் கூட அவரை சமூக வலைதங்களின் மூலமாக பல நிகழ்ச்சிகளில் பார்த்து வருகின்றனர். உடல் எடையை கூட வெகுவாக குறைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் விடாமுயற்சி படத்தில் இடம் பெற்ற சவகீதா என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

SK25 படத்தில் ஏன் நடிக்க ஒத்துக் கொண்டேன் தெரியுமா? காரணத்தை சொன்ன அதர்வா!

அறிவு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஆண்டனி தாசன் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர். இந்த நிலையில் தான் சவகீதாவிற்கு அர்த்தம் என்ன? ஏன், இப்படியொரு பாடல் வரிகள் கொண்டு பாடல் உருவாக்கப்பட்டது என்பது குறித்து இந்தப் பாடலை பாடிய ஆண்டனி தாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மலாய் தாய்மொழியில் சவகீதா என்பதற்கு வெல்கம் என்று அர்த்தம். இதே போன்று தான் கப்புங்கானா என்றால் நன்றி என்று அர்த்தம். இந்தப் பாடலை எழுதிய அறிவு அல்லது அனிருத் பாடியிருக்கலாம். ஆனால் என்னை பாட வைத்தார்கள். மாலாய் தாய் மொழியில் பாட வேண்டும் என்கிற என்னுடைய ஆசை இந்தப் பாடலின் மூலமாக நிறைவேறிவிட்டது என்று ஆண்டனி தாசன் கூறியுள்ளார்.

பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?