
"ஓவியா " இந்த பெயர் கடந்த ஆண்டில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிற செய்த பெயர். ஏன் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பெயர்.
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஓவியா கடந்த 2007 ம் ஆண்டு முதல்முறையாக தமிழில் களவாணி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
அதன் பிறகு கலகலப்பு, மெரினா, சண்ட மாருதம் போன்ற படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலமாகவே மிக பிரபலமானார் ஓவியா.
ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கினர்."ஓவியா ஆர்மி" என்ற ஒன்றையும் ஆரம்பித்தனர். ஓவியா அழுதால் அழுதனர், சிரித்தால் சிரித்தனர். அந்த அளவுக்கு தமிழக மக்களின் உயிர் மூச்சாகவே ஆகி இருந்தார் ஓவியா.
தன்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விளம்பரங்களிலும் ,படங்களிலும் நடித்து வருகிறார் ஓவியா. ராகவா லாரன்ஸின் காஞ்சனா3 லும் ,தெலுங்கில் தருண் ஜோடியாக 'இடி நா லவ் ஸ்டோரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஓவியா ரெமோ படத்தில் வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவருடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சூரில் ஒரே தெருவை சேர்ந்தவர்களாம். மேலும் திரைப்படத்திற்கு முன்பே இருவருக்கும் அறிமுகம் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.