வீட்டை விட்டு விரட்டப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத் ! 

 
Published : Jan 10, 2018, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
வீட்டை விட்டு விரட்டப்பட்ட நடிகை மல்லிகா ஷெராவத் ! 

சுருக்கம்

actress mallika sharawath issue

பாலிவுட் ரசிகர்களை தன்னுடைய கவர்ச்சியால் கட்டிப் போட்ட நடிகைகளில் ஒருவர் மல்லிகா ஷெராவத். இவர் தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் உலக நாயகன் கமலஹாசன் பத்து வேடங்களில் நடித்த, 'தசாவதாரம்' படத்தில் வில்லியாக நடித்தார். அதே போல் 'ஒஸ்தி' படத்தில் சிம்புவுடன் 'கலசலா' என்கிற பாடலுக்கு கலக்கலாக நடனமாடி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். 

ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு, கரண் சிங் கில் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.  பின் 2016 ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிரில்லே ஆஸேன்பான்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது பாரிஸில் வாடகை வீட்டில்  வசித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வீட்டிற்கு இவர் சரியாக வாடகை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வீட்டின் உரிமையாளர் மல்லிகா ஷெராவத் மீதும், இவருடைய கணவர் சிரில்லே மீதும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக மல்லிகா ஷெராவத் மற்றும் அவரது கணவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!