அய்யோ பாவம்! விக்ரம்பிரபு படத்தில் ஹன்சிகா

 
Published : Jan 10, 2018, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
அய்யோ பாவம்! விக்ரம்பிரபு  படத்தில் ஹன்சிகா

சுருக்கம்

hansika acting in vikram prabu movie

 கல்யாண் குமார் இயக்கத்தில் பிரபுதேவா,  ஹன்சிகா நடித்த படம்  குலேபகாவலி.  இந்நிலையில் குலேபகாவலியும் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ஹன்சிகாவிற்கு வேறு படங்கள் எதுவும் கைவசம் இல்லை. கடந்த ஆண்டு ஹன்சிகா, ஜெயம் ரவி நடித்த போகன் படம் மட்டுமே தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் தற்போது மார்க்கெட் குறைந்ததால் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார் ஹன்சிகா.

இந்த நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் துப்பாக்கி  முனை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஏற்கனவே கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் விக்ரம் பிரபு இணைந்த படம் அரிமா நம்பி. இந்த படம் ஓரளவு வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு விக்ரம் பிரபு நடித்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ,அவரின் பெயருக்கு பின்னால் வைத்துக்கொண்ட வீரத் திலகம் என்ற பட்டத்திற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

 தமிழில் படங்கள் இல்லாததால் மார்கெட் குறைந்த விக்ரம் பிரபுவுடன் இணைகிறார் ஹன்சிகா. இது தவிர எஸ்.எஸ் சூர்யா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த பக்கா என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!