ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த..... கோவையை சேர்ந்த தமிழ்மகன்.....!!!

 
Published : Jan 18, 2017, 12:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த..... கோவையை சேர்ந்த தமிழ்மகன்.....!!!

சுருக்கம்

திரையுலகினருக்கு 24 பிரிவுகள் அடிப்படையில் வழங்கப்படும், மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதை இந்தியாவில் முதல் முதலாக பெற்று பெருமை சேர்த்தவர் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான்.

தற்போது கோயபுத்தூரை சேர்த்த கிரண் பாத் என்கிற 41 வயது இளைஞன் தொழில்நுட்ப பணிக்காக  இரண்டாவது முறையாக மேலும் ஒரு ஆஸ்கர் விருதை பெற்று இந்தியாவிற்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் பெருமைசேர்த்துள்ளார்.

இந்த விருது பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இவர் அவெஞ்சர்ஸ், பைரட்ஸ் ஆப் கரேபியன், ஹல்க் ,ஸ்டார் வார்ஸ் எபிசோடு 7 , உள்ளிட்ட படங்களில் கதாபாத்திரத்திற்கு முக பாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம்  மேற்கொண்டதற்காக இவருக்கு இந்த விருது வழங்க பட உள்ளது .

இந்த விருதை பெரும் கிரண் பாத்க்கு, கோலிவுட், ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல தற்போது பொது செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தன்னுடைய வாழ்த்தை அவருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், ஜெயலலிதா எந்த துறையில் சாதித்து வந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களை கூறுவது  போல தற்போது அவர் மறைந்தாலும்  அவர் மேற்கொண்ட அதே போன்ற பணிகளை, அதிமுக தொடர்ந்து ஈடுபடும் என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?
அவ கூட வாழ முடியாது; டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க!" - அடம் பிடிக்கும் சரவணன்; கலங்கி நிற்கும் பாண்டியன்!