
நடிகர் மயில்சாமி, தற்போது, ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். அதில் ஜல்லிக்கட்டு குறித்து, தனது ஆதரவை பதிவு செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மயில்சாமியாகி நான், பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இப்போது வரை அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தனும். கோயில் காளைகளையாவது, குறைஞ்ச 5 காளையாவது அந்த வழியாக அனுப்பனும்னு இதுவரை போராட்டம் நடந்து வருகிறது.
என்கென்ன வருத்தம் என்றால், சட்டத்தை மதித்து ஒரு நீதிபதி சொன்னதன் காரத்துக்காகவும், தமிழகத்துக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும், நேற்று காலை முதல் இதுவரை அங்கு எத்தனை இளைஞர்கள் தங்களது உரிமைக்காக கஷ்டப்படுகிறார்கள்.
அவர்கள் தண்ணீர் குடித்தார்களா, சாப்பிட்டார்களா, இப்போது என்ன செய்ய போகிறார்கள், என நமக்கு யோசிக்க தோன்றுகிறது.
இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், நான் ஒரு தமிழன் என்ற முறையில் பேசுகிறேன். முதல் காரணம் எனக்கு ஓட்டு உரிமை இருக்கிறது. வருமான வரி கட்டுகிறேன். அதற்காக நான் தைரியமாக பேசலாம். ஒரு இந்திய குடிமகன், தனது உரிமையை எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். நல்லமுறையில்.
இந்த நீதிமன்ற உத்தரவுக்கு, இந்தியனான நான், தலை வணங்குகிறேன். இந்தியாவே தலை வணங்க வேண்டும். அதில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அதில் குறிப்பாக வெட்கப்பட வேண்டுமானால், தமிழக அரசு ரொம்வே வெட்கப்பட வேண்டும்.
இதை செய்வேன், அதை செய்வேன் என சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். அதுவேறு விஷயம். இப்போது என்ன செய்யப்போகிறீர்கள். 2, 3 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டாமா?.
யரோ ஒருவர், கட்சியின் முன்னாள் அமைச்சர், விமர்சித்தார் என்பதற்காக, 10 நிமிடத்துக்கு ஒரு அமைச்சர்கள் வந்து பேசுகிறார்கள். 4 நாட்களாக அவதிப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும். லட்சக்கணக்கானோர். ஆயிரக்கணக்கானோர் அலங்கா நல்லூரில் இருக்கிறார்கள். அவர்களுக்கு யாராவது ஆறுதல் கூறினீர்களா…?
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி? அதை பற்றி எனக்கு கவலை இல்லை. என் தமிழ் உரிமைக்காக பேசுகிறேன்.
யாராவது ஒருவர் டிவி மூலமோ, நேரடியாகவோ சென்று மக்களே, அடுத்த ஆண்டு நான் வாங்கி தருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்துவோம் என தைரியம் கூறியிருந்தால், அவர்கள் போயிருப்பார்கள்.
யாருக்கு என்ன ஆனால், என்ன. பதவி பதவி என கட்டிக்கொண்டு அழுகிறீர்களே. அந்த பதவி உங்கள் கூடவா வரப்போகிறது. செத்தா துணிக்கூட வராது சார்… கட்டின துணிக்கூட வராது சார்…கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துக்குங்க ப்ளீஸ். தமிழனை வாய்க்காதீங்க.
ஒரு பாலியல் தொழிலாளி, ஒரே நாளில் பலருடன் நெருக்கமாக இருப்பதற்கு அங்கீகாரம் தருகிறீர்கள். ஆனால், ஒரு விளையாட்டு போட்டிக்கு ஏன் அங்கீகாரம் தரமறுக்கிறீர்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா..? என்ன சட்டம். பிறகு மகாத்மாக காந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்.
வெள்ளையன் ஆட்சியிலேயே ஜல்லிக்கட்டு நடத்திய தமிழ்நாடு இது. யாரோ ஒருவன், நமது நாட்டுக்கே சம்பந்தம் இல்லாதவன். எங்கிருந்தோ வந்தவன், கோர்ட்டில் புகுந்து கோர்ட்டில் வழக்கை தொடர்ந்து, அதை ஒரு நீதிபதி சொன்னதுக்காக, நிறுத்தி வைத்துவிட்டீர்களே, ஒரு காலச்சாரமே அழிந்துவிட்டதே அதை பற்றி யோசிக்க மாட்டீர்களா..? வருத்தப்பட மாட்டீர்களா, இல்லை உங்களுக்கு அந்த ரோஷமாவது இருக்கிறதா..?
நான ஒரு இந்தியன். இந்த இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் நான் ஒரு மாநிலமாக பேசுகிறேன். எனக்கு தேசப்பற்று இருக்கிறது. தேசிய கொடியை பார்த்தால், நான் கையெடுத்து கும்பிடுவேன்.
உங்களுக்கு அந்த தேசப்பற்று இல்லையா…? யார் அவன். யாரோ ஒருவன் கொடுத்ததற்காக ஒரு கலாச்சாரத்தையே நிறுத்தி வைத்துவிட்டீர்கள்.
நீதியரசர் கேட்டாராம் “சிங்கத்தை அடக்குவீர்களா” என்று. இதை கேட்கலாமா, அவரது படிப்புக்கு..? நீதியரசர் ஐயா அவர்களே, சிங்கத்தை ஏன் அடக்க கூடாது என கேட்கிறீர்களே, ஐயா நான் சாதாரணமானவன், ஸ்கூலுக்கெல்லாம் போகவில்லை. நீங்க சிங்கத்தை கூட்டி வாங்கய்யா, நான் அடக்குகிறேன். எடுத்துடுட்டு வராதீங்க… சிங்கத்தை கூட்டிட்டு வாங்க…நான் அடக்குகிறேன்.
ரொம்ப மனவேதனையாக இருக்கிறது. சோறு இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல், அத்தனை பேர் அங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள்.
அரசாங்கமே, அடிக்க உதைக்க ஆட்களை வைத்து இருக்கிறாய். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஒரு கலெக்டரை வைத்திருக்கிறாய். ஆனால் யாராவது ஒருவர் சென்று ஆறுதல் கூறியிருக்கலாமே…
மேடையில் ஏறி பேசிவிடலாம். ஆனால், வருத்தத்தை தெரிவிக்க முடியாது. ரொம்ப கஷ்டமா இருக்கு சார்…
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய விஷயம். எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், நம்முடையை உரிமையை ஒருபோதும் யாருக்காகவும் விட்டு கொடுக்க கூடாது.
அங்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என உட்கார்ந்து இருக்கிறார்களே, அவர்களை நான் கையெடுத்து கும்பிடுகிறேன். ஒருபோதும் யாரும் பின் வாங்க வேண்டாம். தன்னுடைய உணர்ச்சிக்காக போராடுங்கள்.
எனக்கு போலீஸ் துறையில் நிறைய பேரை தெரியும். எல்லோருமே நல்லவர்கள் தான். நான் தெரியாமல் கேட்கிறேன், ஆங்ஊங் என்றால் லத்தி சார்ஜ் செய்கிறீர்களே… அப்போது, நீங்க யாரிடமும் கை நீட்டாமல், லஞ்சம் வாங்காமல் இருந்தால், என் மீது லத்தி சார்ஜ் பன்னுங்க என சொன்னால் உங்களால் அடிக்க முடியுமா..? 100ல் 10 போலீஸ்கார்ர்கள் தான் அடிக்க முடியும். இந்த நாட்டில் நேர்மையான போலீஸ்காரர்களும் இருங்காங்க சார்…
தயவு செய்து யாரையும் சித்திரவதை செய்ய வேண்டாம். போராட்டம் என்பது தனக்கு இல்லை. தன்னுடைய உரிமைக்கு, தன்னுடைய மாநிலத்துக்கு, தமிழுக்கு.
தீவிரவாதம் எங்கு உருவாகிறது. அவனா உருவாக்குகிறானா..? அரசாங்கம் உருவாக்குகிறது. தனக்கு என்ன தேவையோ, அதுகிடைக்காவிட்டால் அது போராட்டம் தானே.
நான் தெரியாமல் கேட்கிறேன். மத்திய அரசு, மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என யார் சொன்னது. எங்கு பார்த்தாலும் போராட்டம் தானே. அப்போது, அரசாங்கம் சரியில்லை என்று தானே அர்த்தம்.
ஒவ்வொரு மாணவனும்பொறுமையாக இருக்கிறான். காலை முதல் அமைதியாக போராட்டம் செய்கிறான். மாணவன் நினைத்தால், நடத்தி காட்டுவான். அனைவரும் கடைசி வரை போராடுங்கள். அமைதியாக போராடுங்கள். வெற்றி நிச்சயம் நமதே…?
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.