
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நித்தியானந்தா, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், இந்தியாவை விட்டே வெளியேறி தனி தீவு ஒன்றை வாங்கிவிட்டு தன்னுடைய ஆசிரமத்தியில் உள்ள சிஷ்ய கோடிகளுடன் குடியேறினார். சில நாட்கள் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், பின்னர் கைலாசாவில் இருப்பதாக சமூக வலைத்தளம் அறிவித்தார்.
தற்போது கைலாஸா என்கிற நாட்டையே உருவாக்கிவிட்ட நித்தியானந்தா... தன்னுடைய நாட்டிற்காக தனி பாஸ்போர்ட், கொடி, தேசிய கீதம், ரூபாய் நோட்டு என.... பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதெல்லாம் போக, கைலாஸாவிற்கு வருகை தர விரும்புபவர்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. தனி தீவில் வாழ்ந்து வந்தாலும் உலக நாடுகளில் என்னென்ன நடந்து வருகிறது என்பதை உற்று நோக்கி வருகிறார் நித்தியானந்தா.
அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில்... அடுத்தடுத்து பலரை தன்னுடைய வாழ்த்துக்களால் பெருமை படுத்தி வருகிறார். இயக்குனர் பேரரசு பற்றி புகழ்ந்து பேசிய நித்தியானந்தா தற்போது, இயக்குனர் மோகன் ஜி போட்ட பதிவால் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது, ‘வள்ளல் மகாராஜரின் நூல் வெளியிடப்பட்டதாக இயக்குனர் மோகன் ஜி அவர்கள் போட்ட படுவாள் மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு என் வாழ்த்துக்கள் என கூறி, அந்த நூலை வெளியிட பாடுபட்ட அன்பர்கள் அனைவர்க்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும், ஆசியையும் கூறியுள்ளார். இந்த வீடியோவை நித்யானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோவுக்கு இயக்குனர் மோகன் ஜி நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அட்ஜெஸ்ட்மென்டால் முன்னணி இடத்தை பிடித்த நடிகையில் அழகில் மயங்கிய ஹீரோ.! செய்வினை வைத்த பெற்றோர்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.