கழுத்தில் விபூதி... கையில் சிகரெட்! பரபரப்பாக இருக்கும் சூரி.. வெளியானது 'கொட்டுகாளி' டீசர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் 'கொட்டுகாளி' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
 


நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் நடிகராக படு பிஸியாக இருந்தாலும், அடுத்தடுத்து திறமையான இயக்குனர்களின் கதையை, தேர்வு செய்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் ஆக்கி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரிப்பில் வெளியான, கனா, டாக்டர், டான், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு 100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

Latest Videos

இதையடுத்து காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து,  சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கு 'கொட்டுகாளி' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சற்று முன் இப்படத்தின் டீசர் வெளியானது. ஒரு சேவலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட உள்ளது, போஸ்டர் வெளியான போதே உறுதியான நிலையில்... தற்போது வெளியாகியுள்ள டீசரில் ஒரு சேவல் மற்றும் ஒரு பெண் ஆட்டோவில் அமர்ந்திருப்பது போலவும், கோவில் மணி அடிப்பது போன்றும்... சூரி கையில் சிகரெட்டை மிகவும் பதட்டத்துடன் பிடித்து விட்டு கீழே தூக்கி எறிந்து விட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

61 வயதிலும்... 25 வயது ஹீரோயின் போல் பொங்கும் இளமை! நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் போட்டோ ஷூட்!

கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஒரு சேவலை மையமாக வைத்தே இந்த கதை நகரும் என்பது இப்படத்தை டீசரை பார்க்கும்போது தெரிகிறது. அதேபோல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான. பி எஸ் வினோத் ராஜ் இயக்க உள்ளார்.

Nayanthara: மளமளவென சரியும் நயன்தாரா மார்க்கெட்! சம்பளத்தை குறைத்து எதிர்பார்க்காத ஹீரோவுடன் ஜோடி சேர்கிறாரா?

எதார்த்தமான கதையை படமாக்கி, 'கூழாங்கல்' படத்திற்கு பல விருதுகளைப் பெற்ற இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ், இப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சத்துடன் இயக்க உள்ளார் என்பது டீச்சரின் மூலமே தெரிகிறது. தற்போது இந்த டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

We proudly present the first look tease of 😊👍

Written & directed by
Starring & 👍 pic.twitter.com/kO51HUXt67

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

 

click me!