3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற 60 வயது நடிகர் ஒருவர் தற்போது பிரபல நடிகையை நான்காவது திருமணம் செய்துள்ளது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கன்னட திரையுலகில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ். இவர் தமிழிலும் விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய வீட்ல விசேஷம், கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு சுரேந்தர் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட பவித்ர, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார்.
தற்போது 44 வயதாகும் நடிகை பவித்ரா லோகேஷ், கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷ் பாபுவை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இருவரும் லிவ்விங் டுகெதர் முறையில் ஒரே வீட்டில் வாழ்ந்தும் வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக புத்தாண்டன்று பவித்ராவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்தபடி வீடியோ வெளியிட்டு தாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதையும் உறுதிப்படுத்தி இருந்தார் நரேஷ்.
இதையும் படியுங்கள்... யாரும் எதிர்பார்க்காத கூட்டணி... சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘கொட்டுக்காளி’ - இயக்கபோவது யார் தெரியுமா?
இந்நிலையில், இன்று நரேஷ் - பவித்ரா லோகேஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. அவர்கள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டபோது எடுத்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர் நரேஷ் 60 வயதில் திருமணம் செய்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் பல்லுபோன வயசுல உங்களுக்கு பக்கோடா கேக்குதா என கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் நரேஷ் பாபுவுக்கு இது நான்காவது திருமணம் ஆகும். இதற்கு முன்னர் மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நரேஷ், தற்போது நடிகை பவித்ரா லோகேஷை நான்காவது திருமணம் செய்து இருக்கிறார். நடிகர் நரேஷ் 60 வயதில் திருமணம் செய்துகொண்டுள்ள தகவல் தான் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்களது திருமண வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Seeking your blessings for a life time of peace & joy in this new journey of us🤗
ఒక పవిత్ర బంధం
రెండు మనసులు
మూడు ముళ్ళు
ఏడు అడుగులు 🙏
మీ ఆశీస్సులు కోరుకుంటూ ఇట్లు
- మీ ❤️ pic.twitter.com/f26dgXXl6g
இதையும் படியுங்கள்... கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்... பிக்பாஸ் அர்ச்சனா கூறிய அதிர்ச்சி தகவல்