
கல்கியின் கைவண்ணத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குனர், மணிரத்தினம் இயக்கத்தில்.. மிகப்பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 1' மற்றும் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிடம் வாரிக் குவித்தது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முதல் பாகத்திலேயே தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை பெற்று தந்தது.
இப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், வந்திய தேவனாக கார்த்தியும், கரிகாலனாக விக்ரமும் நடித்திருந்தனர். இமேலும், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின் காக்குமானு, ஜெயசித்ரா, ரகுமான், சோபிதா துளிபாலா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம், ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்த நிலையில், இதற்கான பிரமோஷன் பணிகளை இப்போதே துவங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதன்படி ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்த செய்த நிலையில், தற்போது விரைவில் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என திரிஷாவின் விதவிதமான குந்தவை கெட்டப்புடன் கூடிய விடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.