இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலுக்கு இசை அமைத்த கிட்டார்ஸ்ட் மரணம்! கலங்கியபடி இரங்கல் கூறிய இசைஞானி.. வீடியோ!

By manimegalai a  |  First Published Mar 9, 2023, 3:16 PM IST

கோலிவுட் திரை உலகில் எண்ணற்ற பாடல்களால், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இளையராஜாவின் பாடல்களுக்கு, இசையமைத்த கிடாரிஸ்ட் கே. சந்திரசேகரன் உயிரிழந்ததை தொடர்ந்து, மிகவும் வேதனையோடு இளையராஜா வீடியோ வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 


இளையராஜா இசையில் ஆயிரக்கணக்கான பாடல்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு பேவரட் பாடல்களாக உள்ளன. அந்த வகையில், இளையராஜா இசையமைத்த பாடல்களான இளையநிலா, பாடும் வானம் பாடி போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து, தன்னுடைய கிட்டார் இசையின் மூலம்... பாடல்களை மெருகேற்றியவர் கே சந்திரசேகரன்.

கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தன்னுடைய 79 வயதில் நேற்று மாலை உயிரிழந்தார். இவருடைய சகோதரர் மறைந்த் ட்ரம்ஸ் கலைஞர் புருஷோத்தமன் அவர்களும் இளையராஜாவின் குரூப்பில் டிரம்ஸ்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவரை தொடர்ந்து அவரின் சகோதரரும் உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!

திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல சீரியல் நடிகை மரணம்..!

இந்நிலையில் கிட்டாரிஸ்ட் கே.சந்திரசேகரன் மரணம் குறித்து இளையராஜா தன்னுடைய வீடியோ ஒன்றை சமுக வலைதளத்தில் வெளியிட்டு, இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது, "என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிரியமான, இசை கலைஞரான கே. சந்திரசேகரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமன் அவர்களின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள். அவர் என்னுடன் இணைந்து நிறைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் தற்போது வரை மக்கள் மனதிலே நீங்காமல் உள்ளன. அவருடைய இறப்பில் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

இசைக்கலைஞர் சந்திரசேகரன் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு வருத்தத்துடன் வீடியோ வெளியிட்ட இசைஞானி இளையராஜா | | | | | | pic.twitter.com/yT3cLATapu

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

click me!