வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகை எஸ்.கீதா நாயர் மரணமடைந்த தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளித்திரையில் நடிப்பவர்கள், முன்பெல்லாம் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால்... மீண்டும் திரைப்படங்கள் நடிக்க அழைப்பு வராத என்கிற காரணத்தினாலேயே சீரியல்கள் வாய்ப்பை மறுத்தனர்.
ஆனால் கடந்த 10 வருடங்களாக, சீரியல் நடிகைகளும்... வெள்ளித்திரை நடிகர்களுக்கு நிகராக பார்க்கப்படுவதோடு, சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகும் பலர், வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக மாறி விடுகிறார்கள். இந்நிலையில், ரசிகர்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்த, பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!
'பகல்புரம்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எஸ்.கீதா நாயர். திருவனந்தபுரம் வெண்பாலவட்டத்தை சேர்ந்தவர் இவர் ஏசியாநெட் மற்றும் அமிர்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திடீர் என ஏற்பட்ட உலடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. இந்த தகவல் மலையாள திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் நடிகை கீதா நாயருக்கு தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.