மருத்துவ செலவுக்கு பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு ரஜினிகாந்த் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார்.
பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் தனக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
வி,ஏ,துரை சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதை அறிந்த நடிகர் சூர்யா, அவருக்கு உடனடியாக மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சத்தை வழங்கி இருந்தார். மேலும் நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் வழங்கி உதவியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் வி.ஏ துரை, தன்னிடம் உதவி கோரியதை அறிந்த ரஜினிகாந்த அவரிடம் போன் போட்டு பேசினாராம்.
இதையும் படியுங்கள்.... கத்தாத... மைக்-அ கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ - ரசிகர்கள் செயலால் டென்ஷன் ஆன இளையராஜா
போனில் அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த ரஜினி, நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், எல்லாத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொன்னதோடு, ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் உங்களை வந்து சந்திக்கிறேன் என சொல்லி வி.ஏ.துரைக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறாராம். இந்த சமயத்தில் ரஜினிக்கும் தனக்கும் இடையேயான பழக்கம் பற்றி பேசியுள்ளார் வி.ஏ.துரை.
அதன்படி ரஜினியுடன் தான் 25-க்கு மேற்பட்ட படங்களில் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியதாக கூறிய அவர், குறிப்பாக பாபா படத்தில் எக்சிகியூட்டிவ் புரொடியூசராக பணியாற்றியபோது அந்த சமயத்திலேயே ரஜினி தனக்கு ரூ.51 லட்சம் சம்பளமாக வழங்கியதாகவும், இந்த பணத்தை தான் சரியான முறையில் பயன்படுத்தாமல் அனைத்தையும் இழந்துவிட்டதாக கூறி உள்ளார் வி.ஏ.துரை.
இதையும் படியுங்கள்.... அஜித் கழட்டிவிட்டா என்ன.. நான் இருக்கேன்னு சொன்ன கமல் - ஆண்டவருடன் கூட்டணி அமைத்து அதிரடிகாட்ட ரெடியான விக்கி?