கமலுடன் கைகோர்க்கும் சிம்பு? வீடியோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பால் எகிறிய எதிர்பாப்பு!

Published : Mar 08, 2023, 11:28 PM IST
கமலுடன் கைகோர்க்கும் சிம்பு?  வீடியோவுடன் வெளியான முக்கிய அறிவிப்பால் எகிறிய எதிர்பாப்பு!

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படம் குறித்த தகவல் நாளை மாலை வெளியாகும் என, வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு.  

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, கமல் 4 படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் நடிகர் உதயநிதியை வைத்து ஒரு படம் தயாரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதால், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும், நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் தயாரிக்க கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நாளை, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயோசிட்ஸ் பிரச்சனையில் இருந்து மீண்ட சமந்தாவுக்கு... மகளிர் தினத்தில் குஷி படக்குழு செய்த விஷயம்! வைரல் போட்டோ

ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில்...  இதில் BLOODandBATTLE என்ற கேஷன் இடம்பெற்றுள்ளதால், சிம்பு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட படத்தை தான் கமல் தயாரிக்க உள்ளதாக நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. சிம்புவின் 48 ஆவது படமாக இப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வித் அவுட் மேக்கப்பில்.. ரம்யா பாண்டியனை காப்பி அடித்து மொட்டை மாடியில்.. கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய அனுபமா!

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டீசர் சம்பத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த இடத்தில் சிம்பு கேங் ஸ்டார் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதே போல் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்கிற படத்திலும் நடிக்க உள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்