Actor Bala Health: ICU-வில் இருக்கும் நடிகர் பாலா உடல்நிலை குறித்து மனைவி கூறிய தகவல்!

By manimegalai a  |  First Published Mar 8, 2023, 10:06 PM IST

நடிகர் பாலாவின் உடல்நிலை குறித்து, அவருடைய இரண்டாவது மனைவி எலிசபெத், முதல் முறையாக  தெரிவித்துள்ளார்.
 


தமிழில் காதல் கிசுகிசு, அன்பு, வீரம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகரும் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரருமான பாலா. இந்நிலையில் இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், திடீர் என உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து,  கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள.. அவருக்கு கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தனர்.

ஐசியு பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நடிகர் பாலா குறித்த தகவல் வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பலரும் விரைவில் பாலா குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் பாலாவின் முன்னாள் மனைவியும் பாடகியான அம்ரித்தா அவரின், இரண்டாவது மனைவியும் மருத்துவருமான எலிசபெத், தாயார், இயக்குனர் சிவா, என ஒருவர் பின் ஒருவராக பாலாவை நேரில் சென்று நலம் விசாரித்து வந்த நிலையில், தற்போது பாலாவின் இரண்டாவது மனைவி எலிசபெத் முதல் முறையாக பாலா உடல் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

எதிர்நீச்சல் சீரியலால் வந்த வினை..! ஷூட்டிங் முடிந்ததும்... மருத்துவமனைக்கு ஓடிய ஜான்சி ராணி! ஏன் தெரியுமா?

இது குறித்து அவர் கூறியுள்ள தகவலில், ஐசியூ பிரிவில் பாலா சிகிச்சை பெற்று வந்தாலும்... அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நலமாக உள்ளதாக பாலா, தன்னுடைய ரசிகர்களிடம் தெரிவிக்க சொன்னதாக கூறியுள்ளார்.

Exclusive: முதல் முறையாக இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! வைரல் போட்டோஸ்!

பாலா தன்னுடைய முதல் மனைவி அம்ரித்தாவிடம் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த ஆண்டு எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் ஆன ஒரே வருடத்தில்,எலிசபெத்திடம் இருந்து பிரிந்து விட்டதாகவும், நட்பு ரீதியாக இருவரும் நண்பர்களாக உள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தொடர்ந்து பாலாவின் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

திருமணமான நடிகரை கமுக்கமாக காதலித்து விட்டு.. அவர் ஒரு பிளே பாய் என தெரிந்ததும் கழட்டி விட்ட நடிகை மீனா?

click me!