நடிகர் சூர்யா இந்தியா சார்பில் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தன்னுடைய வாக்கை செலுத்தி விட்டதாக ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. உலக அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், மற்றும் திரையுலக கலைஞர்களுக்கு வழங்கும் விருதுகளில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்பது பல பிரபலங்களின்கனவு . இதனை நடிகர் பார்த்திபன் போன்ற பிரபலங்கள் மேடைகளில் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
இந்த ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் இருந்து இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான 'RRR' திரைப்படத்தில் இடம் பெற்ற, 'நாட்டு நாட்டு' சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் 'செல்லோ ஷோ' என்கிற குஜராத்தி திரைப்படம், 'ஆல் தட் ப்ரீத்' மற்றும் 'எலிபேன்ட் விஸ்பரர்ஸ்' என்கிற இரண்டு ஆவணப்படம் படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இப்படி, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களை தேர்வு செய்யும் ஆஸ்கர் விருது உறுப்பினர் கமிட்டி, பல வருடங்களுக்கு பின், புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதில் இந்தியாவை சேர்ந்த நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா 95 ஆவது ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினரான நடிகர் சூர்யா, தன்னுடைய வாக்கினை செலுத்தி விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் வாக்கை செலுத்திய ஸ்க்ரீன் ஷார்டை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Voting done! pic.twitter.com/Aob1ldYD2p
— Suriya Sivakumar (@Suriya_offl)