தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கரு.பழனியப்பன்... காரணம் இதுதானாம்!!

By Narendran S  |  First Published Mar 7, 2023, 11:53 PM IST

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் கரு.பழனியப்பன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் இயக்கநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். இவர் சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சில திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளாக த்னியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

இதையும் படிங்க: ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது அதுக்குள்ளயா...! பாரதி கண்ணம்மா 2 சீரியலில் இருந்து விலகிய நடிகை

Tap to resize

Latest Videos

இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெறும். அவர் பணியாற்றி வந்த தனியார் தொலைக்காட்சி பாஜக பிரமுகருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால் கரு.பழனியப்பன் திராவிட இயக்க சிந்தனையாளர். இந்த நிலையில் கரு.பழனியப்பன் நிகழ்ச்சியில் தொடர்ந்து திராவிட சிந்தனைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஆங்கிலத்தில் பேசி சொடக்கு போட்டு ராதிகாவை அசரவைக்கும் பாக்கியா!

இதனிடையே கரு.பழனியப்பன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கரு.பழனியப்பன் தனது டிவிட்டரில், நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூகநீதி, சுயமரியாதை, திராவிடம்  என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. நன்றி என்று தெரிவித்துள்ளார்.

உடனான நான்கு வருட" தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.!சமூகநீதி,சுயமரியாதை,திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில் , அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! .....
நன்றி! ... pic.twitter.com/uxwQLfa66o

— கரு பழனியப்பன் (@karupalaniappan)
click me!