ஃபுல் ரொமான்ஸ்... லிப் லாக் காட்சியோடு திருமண வீடியோவை முதல் முறையாக வெளியிட்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி!

Published : Aug 12, 2022, 08:26 PM IST
ஃபுல் ரொமான்ஸ்... லிப் லாக் காட்சியோடு திருமண வீடியோவை முதல் முறையாக வெளியிட்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி!

சுருக்கம்

திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் காதலர்களாக மாறிய நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது முதல் முறையாக தங்களுடைய திருமண வீடியோவை அவர்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக 'டார்லிங்' படத்தில் அழகிய பேயாக நடித்து, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நிக்கி கல்ராணி. இந்த படம் வெற்றி பெற்றதால், தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2, யாகாவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவருக்கும், தமிழ்... ஈரம், மிருகம், அரவான் போன்ற தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் ஆதிக்கும் இடையே, யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த போது, காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களாக இருவரும் ரகசியமாக தங்களது காதல் உறவை வளர்த்து வந்த நிலையில், சமீபத்தில் திருமண உறவில் இணைந்தனர். 

மேலும் செய்திகள்: ஏடாகூடமாக புடவையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு படு மோசமாக போஸ் கொடுத்த 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்!
 

இருவரது பெற்றோர் சம்மதத்துடன், ஆதி - நிக்கி கல்ராணி திருமணம், கடந்த மே 18-ந் தேதி மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாழ்த்தினர். அதே போல் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ஜீவா, சசிகுமார், நாசர், அருண்விஜய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், தாணு, இயக்குனர் ஹரி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்: படு பயங்கரம்.. ஜாக்கெட்டுக்கு முன்னாள் ஜன்னல் வைத்து... சேலையை சரிய விட்டு ஓப்பனாக காட்டும் தமன்னா! போட்டோஸ்..
 

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு நிக்கி கல்ராணி விலகி விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது நிக்கி - ஆதி ஜோடி முதல் முறையாக தங்களுடைய திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். காதல், ரொமான்ஸ் என எதற்கும் குறைவில்லாமல்... லிப் லாக் முத்தத்தோடு துவங்கும் இந்த வீடியோவில், அவர்களது திருமண கொண்டாட்டம், மெஹந்தி என அனைத்தின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!
அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!