JR 29 shooting spot accident : ஜெயம் ரவி, நயன்தாரா சூட்டிங்கில் விபத்து...சினிமா தொழிலாளி கவலைக்கிடம்!

By Kanmani PFirst Published Aug 12, 2022, 3:04 PM IST
Highlights

ஜெயம் ரவி 29 -ல் பணியாற்றி வந்த பெப்சி தொழிலாளர் ஒருவர் கோடாவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். தற்போது அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் அவரை காண பெப்சி சங்கம் உட்பட யாரையும் பட தயாரிப்பு நிறுவனம் அனுமதிக்கவில்லை என்பதால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஸ்பைக் திரில்லர் படமான ஜன கண மன படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி மீண்டும் இயக்குனர் அகமதுடன் கை கோர்த்துள்ளார். இதில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பணியாற்றி வருகிறார். சைக்காலஜிக்கல் திரில்லரான இந்த படம் மார்ச் மாதம் படப்பிடிப்பிற்கு வந்தது. படம் குறித்து பேசி இருந்த இயக்குனர், 'சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும் இது ஒரு அழகான காதல் கதை இதில் இருக்கும். காதலும் உணர்ச்சிகளும் எனது வலுவான அடித்தளமாக உணர்கிறேன். நான் இந்த ஸ்கிரிப்ட் எழுத தொடங்கிய போது அதன் ஒரு பகுதியாக  அழகான காதல் கதையை எழுதியிருந்தேன். அந்த பாத்திரத்திற்கு நயன்தாரா சரியாக பொருந்துவார் என எண்ணுகிறேன்.  அவர்களின் கெமிஸ்ட்ரி  மூலம் படம் ஹிட் அடிக்கும் என நம்புகிறேன் எனக் கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

இந்த படத்தின் படபிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இதற்கு முன்பு மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது இவர்கள் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்திற்கு ஜே ஆர் 29 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பில் கோரா விபத்து ஏற்பட்டுள்ளது.  

மேலும் செய்திகளுக்கு...ஆகஸ்ட் 31க்கு ரெடியான விக்ரமின் கோப்ரா! அடுத்தடுத்த தகவலை வெளியிடும் படக்குழு

சில நாட்களுக்கு முன்னர் ஜெயம் ரவி 29 -ல்  பணியாற்றி வந்த பெப்சி தொழிலாளர் ஒருவர் கோடாவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். தற்போது அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது. ஆனால் அவரை காண பெப்சி சங்கம் உட்பட யாரையும் பட தயாரிப்பு நிறுவனம் அனுமதிக்கவில்லை என்பதால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதற்கிடையே அந்த தொழிலாளியின் மொத்த மருத்துவ செலவையும் ஜெயம் ரவி ஏற்று கொண்டாராம். ஆனால் நடிகரை தவிர தயாரிப்பாளரோ, நடிகை நயன்தாராவோ, இயக்குனரோ இதுவரை அந்த தொழிலாளருக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும்  பெப்சி தரப்பிலிருந்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகளுக்கு...Vendhu thanindhathu kaadu : சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ் தெரியுமா?

முன்னதாக கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் 3 பெப்சி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் என்றாலே அதன் நடிகர், நடிகைகள், இயக்குனர் குறித்து தான் பலருக்கும் தெரிகிறது. உண்மையில் தங்கள் உயிரை பணயம் வைத்து உழைக்கும் சினிமா தொழிலாளர்கள் குறித்து யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை என பெப்சி தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

click me!