ஆகஸ்ட் 31க்கு ரெடியான விக்ரமின் கோப்ரா! அடுத்தடுத்த தகவலை வெளியிடும் படக்குழு

By Kanmani P  |  First Published Aug 12, 2022, 1:30 PM IST

கோப்ரா படம் இந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் டிரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்ற உற்சாகத்தில் சீயான் ஃபேன்ஸ் காத்திருக்கின்றனர்.


இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருப்பது விக்ரமின் கோப்ரா. ராஜ ஞானமுத்து இயக்கி உள்ள இந்த படத்தில் சீயான் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் நீண்ட காத்திருப்பாக இருக்கும் இந்த படத்தை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளி போவதாக அறிவிக்கப்பட்டது.  தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி செட்டி முன்னணி ஜோடியாக நடித்துள்ள  இதில் இர்பான் பதான்  ரோஷன் மேத்யூஸ், மியா ஜார்ஜ், பத்மப்ரியா, கனிகா, மிருணாளினி ரவி, ஆனந்தராஜ், ரோபோ சங்கர் மற்றும் மம்மு கோயா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இதன் மூலம் ஸ்ரீநிதி செட்டி இர்பான் பதான் கோலிவுட்டிற்கு அறிமுகமாகின்றனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...Vendhu thanindhathu kaadu : சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ் தெரியுமா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக உடல்நிலை கோளாறு காரணமாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவிற்கு வருகை தராத சீயான், கோப்ரா ஆடியோ லஞ்சிற்கு வருவாரா? என்கிற  எதிர்பார்ப்பு மிகுந்திருந்த நேரத்தில் ரசிகர்களுக்கு  உற்சாகமளிக்கும் வகைகள் மாஸாக என்று கொடுத்திருந்தார் விக்ரம்.

மேலும் செய்திகளுக்கு...எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

இந்நிலையில் கோப்ரா படம் இந்த மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் டிரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்கின்ற உற்சாகத்தில் சீயான் ஃபேன்ஸ் காத்திருக்கின்றனர்.ர். தற்போது கோபுர படத்தின் புதிய தகவலாக கோபுர கட்டவுட் ஏற்றப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

click me!