ஆங்கில வார இதழின் அட்டை படத்தில் மீரா மிதுன்...‘அந்த’ வார்த்தையால் கடுப்பாகி கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 18, 2020, 5:31 PM IST
Highlights

அந்த கடுப்பில் இருந்து விஜய் ரசிகர்கள் மீண்டு வருவதற்குள், ஆங்கில வார இதழ் ஒன்றிற்காக எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு, மீரா மிதுன் போட்டுள்ள கேப்ஷன் நெட்டிசன்களை செம்ம காண்டாக்கிவிட்டது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 


சென்னை எல்லாம் நமக்கு செட்டாகாது, மும்பை தான் நமக்கு ஏத்த இடம் என்று கிளம்பி போனார். ஆனால் அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். முதலில் ஜாடையாக நயன்தாராவிடம் வம்பிழுத்த மீரா மிதுன், அடுத்து நேரடியாக விஜ்ய்யிடம் மோதி மூக்கை உடைத்துக்கொண்டார். அந்த கடுப்பில் இருந்து விஜய் ரசிகர்கள் மீண்டு வருவதற்குள், ஆங்கில வார இதழ் ஒன்றிற்காக எடுத்த ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு, மீரா மிதுன் போட்டுள்ள கேப்ஷன் நெட்டிசன்களை செம்ம காண்டாக்கிவிட்டது. 

Oh yea Supermodel, Actress, Buissnesswoman,prof dancer, political activist, what's next 😉😎 @sefindzire pic.twitter.com/swnsJFZuZj

— Meera Mitun (@meera_mitun)

இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த மீரா மிதுன் பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, தான் ஒரு சூப்பர் மாடல், நடிகை, தொழில் அதிபர், டான்ஸர், அரசியல் ஆர்வலர் என்று தெரிவித்துள்ளார் மீரா. அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் லூசு, பைத்தியம் என மீரா மிதுனை சகட்டு மேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 

click me!