மாஸ்டர் ஆடியோ லான்சில் கூட லோகேஷ் கனகராஜை ஆகா... ஓஹோ... விஜய் புகழ்ந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.
முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அட்லி. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லி, அவருடைய சாயல் துளியும் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட முறையில் எடுத்த ராஜா ராணி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்து 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!
ஆனால் தமிழ் சினிமாவில் ஏற்கனவே வெளியான பிரபல இயக்குநர்களின் கதையை திருடி, அதை இப்போதைய ட்ரெண்டுக்கு மாற்றி கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. இயக்குநர் மணிரத்னத்தின் மெளன ராகம் படத்தின் காப்பி தான் ராஜா ராணி என நெட்டிசன்கள் கழுவி ஊத்தினர். அதேபோல சத்ரியன் படத்தை வைத்து தெறி-யையும், அபூர்வ சகோதரர்கள் கதையை திருடி மெர்சலையும் எடுத்ததாக அட்லியை மீம்ஸ் கிரியேட்டர்கள் கழுவி ஊத்தினர். இறுதியாக வந்த பிகில் படம் பல படங்களின் காப்பி என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
இதனால் காப்பி பெஸ்ட் இயக்குநர் என்ற பெயர் எடுத்த அட்லி உடன் அடுத்து தளபதி விஜய் படம் பண்ணும் ஐடியாவில் இல்லையாம். தளபதி விஜய்யுடன் அட்லி இருந்த இடத்தை இப்போது நம்ம லோகேஷ் கனகராஜ் பிடித்துவிட்டாராம். தற்போது விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், ஏற்கனவே மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!
மாஸ்டர் ஆடியோ லான்சில் கூட லோகேஷ் கனகராஜை ஆகா... ஓஹோ... விஜய் புகழ்ந்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அதனால் தனது அடுத்த படத்திற்கும் லோகேஷ் கனகராஜையே இயக்குநராக வைத்துக்கொள்ளளாம் என்ற ஐடியாவில் உள்ளாராம் விஜய். இதற்கு முன்னதாக பிகில் பட காப்பி சர்ச்சை வந்த போது, இனி அட்லி உடன் படம் பண்ணாதீங்கண்ணா என தளபதி ஃபேன்ஸ் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.