
தற்போது சினிமாவை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஷயம் டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளும், சீரியல்களும் தான். அந்த வரிசையில் டி.ஆர்.பி.யில் உச்சம் தொட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியில் 13வது சீசன் நடைபெற்றாலும் தற்போது தான் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சி பிரபலமடைந்து வருகிறது. அந்த நிகழ்ச்சியை விட அவர்கள் போடும் புரோமோ வீடியாவை பார்ப்பதற்கு என்றே தனிப்பட்டாளமே உள்ளது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவை தட்டித்தூக்கும் சன்பிக்சர்ஸ்... 1000 கோடி பட்ஜெட்டில் போட்ட மெகா பிளான்...!
சமீபத்தில் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தற்போது 60 நாட்களுக்கு மேல் சென்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் மலையாள ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராசிரியர் ரஜித் குமார் கடந்த 2013ல் இருந்துதான் பிரபலமானார். நிகழ்ச்சியில் பல பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் குழந்தைகள் திருநங்கைகளாக பிறக்கிறார்கள் போன்ற சர்ச்சை கருத்துக்களை கூறியே பேமஸ் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
இப்படி பெண்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்து வந்ததால் தான் சக பெண் போட்டியாளரிடம் அத்துமீறி நடந்துள்ளார். ஆம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பள்ளி பருவம் என்ற டாஸ்கின் போது, சக போட்டியாளரும் மாடலுமான ரேஷ்மாவின் கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டார். இதனால் ரேஷ்மாவின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த காட்சியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் பொங்கி எழ, பேராசிரியர் ரஜித் குமாரின் இந்த வரம்பு மீறிய செயலால் கடுப்பான மோகன்லால் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிவிட்டார். போட்டியாளரை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தி விதிமீறியதால் போட்டியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர் . இப்படி செய்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.