
அப்பா விஜயகுமார் மற்றும் உறவினர்கள் இடையிலான குடும்ப பிரச்சனை காரணமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டானவர் வனிதா. அதன் மூலம் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் வந்தவர் வனிதா.
இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்... பிக்பாஸ் சாக்ஷியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!
வாயை கொடுத்து புண்ணாக்கி கொள்வதில் வல்லவரான வனிதாவை, சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யாதவர்களே கிடையாது. படையப்பா நீலாம்பரி அளவிற்கு, 'வி ஆர் தா பாய்ஸ்' குரூப்பை தெறிச்சி ஓடவிட்டார். நீ வந்த மட்டும் போதும் என்பது போல், வனிதா வந்தாலே பிக்பாஸ் டீம் மீட்டிங் அதிரி புதிரியாக மாறும்.
அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது கொரோனா அச்சம் உச்சகட்டத்தில் இருக்கும் சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!
இந்த சமயத்தில் கிளவுஸ், மாஸ்க் சகிதமாக ஷாப்பிங்கிற்கு கிளம்பிவிட்டார். தான் தொடங்க உள்ள யூ-டியூப் சேனலுக்காக பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் சென்றுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து கடுப்பான நெட்டிசன்களே “நீங்க பேசினாலே கொரோனா ஓடிடும், மாஸ்க் எல்லாம் தேவையில்லை” என்று மரண பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.