பசி பட்டினியோடு சொந்த ஊருக்கு நடந்து செல்லும் குழந்தைகள்! கண் கலங்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட நயன் காதலர்!

Published : Mar 30, 2020, 06:37 PM IST
பசி பட்டினியோடு சொந்த ஊருக்கு நடந்து செல்லும்  குழந்தைகள்! கண் கலங்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட நயன் காதலர்!

சுருக்கம்

நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண் கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் இருந்து பசி பட்டினியோடு நடந்தே செல்லும் ஒரு குடும்பத்தின் சோகத்தை பகிர்ந்துள்ளார்.  

நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண் கலங்க வைக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் இருந்து பசி பட்டினியோடு நடந்தே செல்லும் ஒரு குடும்பத்தின் சோகத்தை பகிர்ந்துள்ளார்.

கொரோன வைரஸின் தாக்கம், உலக நாடுகளை அடுத்து, இந்தியாவிலும் அதன் தாக்கத்தை துவங்கியது. அதனை கட்டு படுத்தும் விதமாக, பாரத பிரதமர் மோடி அதிரடியாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இப்படி ஒரு சூழல் வரும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே திடீர் என அணைத்து வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்தபடி தங்களுடைய பணியை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக டெல்லியில் போக்குவரத்து வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால், அங்கு தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள் பலர், நடை பயணமாகவே தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். பசி பட்டினியோடு செல்லும் இவர்களுக்கு பெரிய மனதோடு யாரவது சாப்பாடு கொடுத்தால் தவிர சாப்பிட வேறு வழி இல்லை.

இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நயன் காதலர் விக்னேஷ் சிவன். அதில் , சோகம்.... சோகம்.... சோகம்... மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி நடக்க துவங்கியுள்ளனர். இதெல்லம் வேகமாக முடிவடையவும், நாளைய நாள் நன்றாக இருக்கவும் பிராத்திப்பதாக கூறியுள்ளார்.

கண் கலங்க வைக்கும் வீடியோ இதோ: 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!