
காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார் சாக்ஷி என்று தான் கூறவேண்டும். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். என்ன தான் கவின் கைவிட்டதால் மனமுடைந்து சாக்ஷி வீட்டிற்கு திரும்பினால் பட வாய்ப்புகள் படையெடுத்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?
என்ன தான் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்ஷி நிறுத்தவே இல்லை. சாக்ஷி ஹாட் போட்டோஸை போட்டு இளசுகளை குஷியாக்கினாலும், அவரது கவர்ச்சியை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊத்தி தான் வருகின்றனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சாக்ஷி தனது கவர்ச்சி போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார்.
இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார்.சமீபத்தில் ஜிகு, ஜிகு டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து போஸ் கொடுத்துள்ள சாக்ஷியின் போட்டோஸ் லைக்குகளையும், அதே அளவிற்கு விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
இதையும் படிங்க: இந்த குட்டி பாப்பா இரண்டு பேரும் யாருன்னு தெரியுதா?... இவங்க தான் இப்ப சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்கள்...!
அந்த டீ-ஷர்ட்டில் முன்புறம் கிஸ் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அதை சுட்டிக்காட்டிய படி சாக்ஷி கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளது. ஏற்கனவே கவர்ச்சி போஸ் கொடுக்க வேண்டாம் என சாக்ஷியை அவரது ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அதிலும் குட்டை உடையில் இப்படி போஸ் கொடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் உங்களிடம் முழுசா எந்த டிரஸும் இல்லையா?, இப்படி எல்லாம் ஏன் போட்டோ வெளியிடுகிறீர்கள் என்று சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.