Ranjith : ஆணவப்படுகொலை என்பது ஒரு வன்முறையல்ல, அது பெற்றோர்களின் பாசத்தின் வெளிப்பாடு என்று பேசி, இப்பொது மிகப்பெரிய ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளார் ரஞ்சித்.
நடிகர் ரஞ்சித், இரண்டாவது முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த படம் தான் கவுண்டம்பாளையம். கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தமிழகத்தில் வெகு சில திரையரங்குகளில் இந்த படம் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் படம் வந்து தெரியும் முன், இயக்குனர் மற்றும் நடிகர் ரஞ்சித் பேசிய சில கருத்துக்களை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆணவப்படுகொலை
"ஒரு பைக் திருடுபோனால், திருடியவனை கண்டதும் நாம் அடிக்கத்தான் ஓடுகிறோம். அதுபோலத்தான், தனது உயிராக காத்து வளர்த்த பிள்ளைகள் காதல் என்று தங்களை விட்டுச்செல்லும்போது பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்படி செய்து விடுகிறார்கள். ஆகவே ஆணவப்படுகொலை என்பது வன்முறையல்ல, அது ஒரு வகையான பாசம் தான்" என்று பேசியுள்ளார் ரஞ்சித்.
நெட்டிசன்கள் ரியாக்ஷன்
இவர் "பாண்டவர் பூமி" படத்தில் இருந்து இன்னும் மீண்டு வரளவில்லை போல, அப்போதும் அப்படித்தான் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று திரும்பினார். இப்பொது மீண்டும் அதுபோல ஜெயிலுக்கு போகப்போகிறார் என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.
"இந்த விஷயத்தில் அவரை சொல்லி எந்த தப்பும் இல்லை, இந்த விஷயத்தை விதைத்தவர்களை தான் தப்பு சொல்லவேண்டும். வளர்ச்சி அடைந்த தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்" என்று கூறி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சில கம்மெண்டுகள் வெளியாகியுள்ளது.
மேலும் ரஞ்சித் குறித்து பேசிய நெட்டிசன்கள் சிலர், தமிழகத்தில் மதக்கலவரம் கொஞ்சம் கூட இல்லை, காரணம் அங்கு நிறையவே ஜாதி கலவரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித்தின் கருத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.