42 வயதிலும் படு ஃபிட்டாக இருக்கும் நடிகை சினேகா, வேர்வை கொட்ட கொட்ட ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை, சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி, 2 குழந்தை பெற்ற பின்னரும்... திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் நடிகை சினேகா, தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது, தளபதி விஜய்க்கு ஜோடியாக 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கும் இந்த சயின்டிபிக் கதையம்சம் மொண்ட படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுதிரியும் நடித்துள்ளனர்.
'அந்தகன்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா நடிகர் பிரஷாந்த்! முதல் நாள் வசூல் விவரம் இதோ..!
சினேகாவை பொறுத்தவரை நடிகை மஞ்சு வாரியர் மற்றும் ஜோதிகா போல் வெயிட்டான ரோல்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். உடல் எடை கொஞ்சம் கூடினாலும், உடல் பயிற்சி செய்து தன்னுடைய எடையை மளமளவென குறைக்கிறார். அந்த வகையில் தற்போது ஹெவி ஒர்க் அவுட் செய்து, உடல் எடையை குறைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது. இதில் சினேகா வேர்வையால் தொப்பறையாக நனைத்து, ஒர்க் அவுட் செய்யும் இவரின் அர்ப்பணிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
தற்போது இவரின் கைவசம், சொல்லிக்கொள்ளும்படி எந்த படங்களும் இல்லை என்றாலும்... விளம்பர படங்கள், மற்றும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் இவர் திறந்துள்ள சினேஹாலயா ஜவுளி நிறுவனத்தை கவனித்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.