இனி அவர் ரஞ்சித் இல்லங்க "செஞ்சித்".. கவுண்டபாளையம் படத்தில் வச்சு செஞ்சுருக்காரு - பாராட்டிய பிரவீன் காந்தி!
Ranjith : பிரபல நடிகை ரஞ்சித் இரண்டாவது முறையாக இயக்குனராக களமிறங்கியுள்ள திரைப்படம் தான் கவுண்டம்பாளையம். அப்படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Ranjith
"பொன்விலங்கு" என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1993ம் ஆண்டு நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர் தான் ரஞ்சித். இன்று மிகப்பெரிய அளவில் இவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றார் என்ற பொழுதும், 90களின் இறுதியில், மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அவர் வலம்வந்தது குறிப்பிடப்பட்டது.
actor Ranjith
இவருடைய நடிப்பில் வெளியான "மறுமலர்ச்சி" என்ற திரைப்படத்திற்காக இவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருது கிடைத்தது. 'நட்புக்காக", "சேரன் சோழன் பாண்டியன்" மற்றும் "பாண்டவர் பூமி" போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய அருமையான நடிப்பை இவர் வெளிப்படுத்தியிருப்பார்.
kavundampalayam
கடந்த 2003ம் ஆண்டு வெளியான "பீஷ்மர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கிய ரஞ்சித், தற்பொழுது நாடகக் காதல் என்னும் விஷயத்தை எதிர்த்து "கவுண்டம்பாளையம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கிறது என்றும், தன் மீது பெரிய அளவில் வன்மங்கள் முன்வைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
praveen gandhi
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குனர் பிரவீன் காந்தி, "கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் மூலம் நாடக காதல் பற்றி பேசி இருக்கும் ரஞ்சித், இனி ரஞ்சித் அல்ல "செஞ்சித்" என்று அழைக்கப்படுவார். இந்த திரைப்படத்தில் அப்படி நாடகக் காதலை வைத்து செய்திருக்கிறார் என்று பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித் ஆனந்த படுகொலை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.