Coolie DISCO : லியோ பட மெகாஹிட் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பணியாற்றி வரும் திரைப்படம் தான் கூலி.
முதல்முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, "கூலி" என்கின்ற திரைப்படத்தில் இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே தளபதி விஜயை வைத்து இரண்டு திரைப்படங்களும், உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படமும் மெகா ஹிட் வெற்றி கொடுத்தவர் லோகேஷ்.
ஏற்கனவே தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளை முடித்து ரஜினி, இப்போது "கூலி" திரைப்பட பணிகளில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி முதல், கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.
சிறகடிக்க ஆசையை அடித்து பறக்கவிட்ட சன் டிவி தொடர்கள்! இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ!
அதன்படி மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சௌபின் ஷாஹிர், முதல் முறையில் கூலி திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். Dayal என்ற கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் இப்போது கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் அவருடைய பெயர் Simon.
Wats cooking brother ?? 🔥🔥🔥
D = Dayal
I = ?
S = Simon
C = ?
O = ? | pic.twitter.com/oGJn3I8Z8q
இந்நிலையில் கூலி திரைப்படத்தில் அண்மையில் வெளியான DISCO என்ற பாடலோடு ஒப்பிட்டு, ஒரு புதிய Theory ஒன்றை இணையவாசிகள் உருவாக்கியுள்ளனர். அதாவது DISCOவில் D - Dayal என்றும், S - Simon என்றும், விரைவில் ICO போன்ற எழுத்துக்களில் துவங்கும் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது லோகேஷுக்கு மட்டுமே வெளிச்சம்.
காற்று வாங்கும் மாடர்ன் உடை.. கவர்ச்சியில் தாராளம் காட்டும் வேதிகா - ஹாட் பிக்ஸ்!