நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது பெண் கலைஞர் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரைப்படத்துறையில் ஒரு பெண் கலைஞரின் புகாரைத் தொடர்ந்து நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள மரடு காவல்துறையினர் எம்எல்ஏ முகேஷ் மீது பிடியாணை பிறப்பிக்க முடியாத வழக்கைப் பதிவு செய்துள்ளனர், அதே நேரத்தில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் ஜெயசூர்யா மீது பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் நோக்கத்தோடு துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் சைகை செய்தல் அல்லது சப்தமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), நடிகர் ஜெயசூர்யா கேரளாவில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு சக பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பணத்தை பதுக்குகிறார்... அவர் ஒரு குப்பை - யோகிபாபுவை சரமாரியாக சாடி சவால்விட்ட வலைப்பேச்சு
சிபிஎம் எம்எல்ஏவான முகேஷ் AMMAவில் உறுப்பினர் பதவியும், படத்தில் வாய்ப்பும் தருவதாக கூறி தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக அந்த பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் மரடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகார்தாரர் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, எடவேள பாபு, வழக்கறிஞர் சந்திரசேகரன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் விச்சு மற்றும் நோபல் ஆகிய ஏழு பேர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.
புதன்கிழமை, சிறப்பு புலனாய்வுக்குழு கொச்சியில் உள்ள அவரது குடியிருப்பில் புகார்தாரரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. டிஐஜி அஜிதா பீகம் மற்றும் பூங்குழலி சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், கன்டோன்மென்ட் காவல்துறை ஜெயசூர்யா மீது வழக்குப் பதிவு செய்தது. ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர் சித்திக் விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஸ்ரீரெட்டி உங்கள் மீது வைத்த பாலியல் புகார்... நடவடிக்கை என்ன? நடிகர் விஷால் ஓபன் டாக்