அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள்! 3 நாளில் புதிய குழு - நடிகர் விஷால் பேட்டி!

By manimegalai a  |  First Published Aug 29, 2024, 1:01 PM IST

ஹேமா கமிட்டி போன்றே தமிழ் திரையுலகிலும் புதிய குழு இன்னும் 3 நாட்களில் அமைக்கப்படும் என்றும், அதில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் கொடுக்கலாம் என நடிகர் விஷால் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர், மலையாள திரையுலகமே மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மலையாள திரை உலகை சேர்ந்த நடிகைகள் பலர்,  தங்களுக்கு சில நடிகர்கள், இயக்குநர்களால் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறி நடைபெற்ற பாலியல் சுரண்டல்கள் குறித்து புகார் கொடுத்துள்ளனர்.

இந்த அறிக்கை வெளியான பின்னர், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன் லால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இவரை தவிர செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் அடுத்தடுத்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.  ஹேமா கமிட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரபல நடிகை ஒருவர் காரில் வைத்து நான்கு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பின்னர், இது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்தே இந்த கமிட்டி உருவாக்கப்பட்டு, நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் குறித்த புகார்கள் பதிவு .செய்யப்பட்டன. இந்த குழு துவங்கிய நான்கு வருடத்திற்கு பின்னர்  இந்த அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

Latest Videos

undefined

மேலும் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்கள் மீதும், மற்ற பிரபலங்கள் மீதும் முறையாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதில் குற்றம் சுமாற்றப்பட்ட ஒரே ஒருவர் மட்டுமே, தன்மீதான புகாரை மறுத்து, காவல் நிலையத்தில் தனக்கு எதிராக புகார் கொடுத்த நடிகை மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து, சமீபத்தில் நடிகை ஷகீலா பிரபல தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், மலையாள திரை உலகில் எப்படி பாலியல் தொல்லை இருக்கிறதோ, அதேபோல் தமிழகத்திலும் பாலியல் ரீதியான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.

ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?

இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறி இருந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் தமிழகத்திலும் இன்னும் மூன்று நாட்களில் ஹேமா கமிட்டி போன்றே 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டும் என்றும், இதில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்கலாம் என விஷால் பிரபல செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அட்ஜஸ்ட்மென்ட்க்கு யாராவது அழைத்தால் அவரை உங்கள் காலில் உள்ள செருப்பைக் கொண்டு அடியுங்கள் என்றும், தமிழ் சினிமாவில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதால், அடிக்கடி அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் துணிச்சலாக புகார் உருவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மாரி செல்வராஜ் கார் ஓட்ட கற்றுக்கொண்டதன் பின்னால் இப்படி ஒரு சம்பவம் இருக்கா?

click me!