
கோலிவுட்டில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் கவின். அவர் நடிப்பில் கடைசியாக ஸ்டார் திரைப்படம் வெளிவந்தது. இளன் இயக்கிய இப்படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் ரிலீஸ் ஆனதால் முன்னணி ஹீரோக்களுக்கு நிகரான ஒப்பனிங் ஸ்டார் படத்துக்கு கிடைத்தாலும் விமர்சனங்கள் கலவையாக இருந்ததால் படம் போகப்போக டல் அடிக்கத் தொடங்கியது. இருப்பினும் முதலுக்கு மோசமின்றி தப்பித்துவிட்டது.
ஸ்டார் படத்துக்கு பின் கவினுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி வந்துள்ளன. அவர் நடிப்பில் தற்போது பிளெடி பெக்கர் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் கவின் உடன் ரெடின் கிங்ஸ்லியும் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தயாரித்துள்ளார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.
இதையும் படியுங்கள்... நிறம் மாறும் தோல்... அடக்கடவுளே ‘மகாராஜா’ பட நடிகை மம்தா மோகன்தாஸுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா?
பிளெடி பெக்கர் திரைப்படத்தின் புரோமோ அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி கவின் நடித்துள்ள பிளெடி பெக்கர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சனின் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ஜெயிலர் கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகி மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அந்த சென்டிமென்டில் தற்போது பிளெடி பெக்கர் படத்தையும் ஆகஸ்டில் ரிலீஸ் செய்கிறார் நெல்சன்.
பிளெடி பெக்கர் படத்தை தொடர்ந்து சதீஷ் இயக்கிய கிஸ், வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் என நடிகர் கவின் கைவசம் அரை டஜன் படங்கள் குவிந்து கிடக்கின்றன. இதுதவிர விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட்டாகி உள்ளாராம் கவின். இதனால் கோலிவுட்டில் தனுஷுக்கு அடுத்தபடியாக பிசியான நடிகர் என்றால் அது கவின் தான்.
இதையும் படியுங்கள்... ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸ்... தனத்துக்கு பளார் என அறைவிட்ட மாயா - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.