வெளிநாட்டு தெருக்களில் நயன்..கிளாமர் உடையில் ட்ரம்ஸ் கலைஞரை ரசிக்கும் விக்கியின் மனைவி

Published : Aug 15, 2022, 07:36 PM ISTUpdated : Aug 15, 2022, 08:07 PM IST
வெளிநாட்டு தெருக்களில் நயன்..கிளாமர் உடையில் ட்ரம்ஸ் கலைஞரை ரசிக்கும் விக்கியின் மனைவி

சுருக்கம்

தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை நயன்தாரா ரசித்தபடி நிற்கும் வீடியோவை தனது இன்ஸா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் விக்கி.

சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய கொண்டாட்டம் என்றால் அது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் தான். கடந்த ஏழு ஆண்டுகளாக காதல் உறவிலிருந்த இவர்கள் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அனிருத் என முன்னணி பிரபலங்கள் பலரும் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இது குறித்தான புகைப்படங்களை ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தார். அதோடு இவர்கள் திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளம் ஒன்று பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். இந்த வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. 

மேலும் செய்திகளுக்கு.. அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே!..வைரலாகும் வாணி போஜனின் நியூ லுக்

திருமணமான கையோடு தாய்லாந்து ஹனிமூன் சென்ற இந்த ஜோடியின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின. பின்னர்  நாடு திரும்பிய விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்து முடிந்த 44ஆவது ஒலிம்பியாட் சதுரங்க விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை இயக்குவதல் பிஸியானார். தற்போது இந்த விழா நிறைவடைந்ததை ஒட்டி மீண்டும் தனது மனைவியுடன் தன் நாட்களை கழித்து வருகிறார் இயக்குனர்.

மேலும் செய்திகளுக்கு.. ஸ்ரீதேவியுடன் நான்..புலி அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர் சிம்பு தேவன்

அதன்படி தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். இது குறித்து விமானத்தில் தன் மனைவியின் கைகளை பிடித்துவாரு இருக்கு புகைப்படத்தை வெளியிட்ட விக்கி,  'தொடர் வேலைக்கு பிறகு நமக்காக சிறிது காலம் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது இவர்கள் ஸ்பெயின் நாட்டில் உல்லாச சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் தான் சமீபத்திய ட்ரெண்டாக உள்ளது. அந்த வகையில் தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை நயன்தாரா ரசித்தபடி நிற்கும் வீடியோவை தனது இன்ஸா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் விக்கி. முன்னதாக இவர்களின் ஹோட்டல் மற்றும் பேருந்து பயணம் குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தன.

மேலும் செய்திகளுக்கு...தனுஷின் நியூ லுக்குடன் திருச்சிற்றம்பலம் புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்தானம் என் சகோதரன் : மறைந்த டாக்டர் சேதுராமனின் மனைவி உருக்கம்: கண்கலங்க வைக்கும் பின்னணி!
நண்பன் வெங்கடேஷுக்காகக் கொள்கையை மாற்றிய பாலகிருஷ்ணா: விஸ்வரூபமெடுக்கும் 'வாவ்' கூட்டணி!