வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்கவிட்ட நயன்- விக்கி...வீடியோ உள்ளே!

Published : Aug 15, 2022, 08:07 PM ISTUpdated : Aug 15, 2022, 08:12 PM IST
வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்கவிட்ட நயன்- விக்கி...வீடியோ உள்ளே!

சுருக்கம்

இரண்டாவது ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அங்கிருந்து தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர்.

இன்று 75 வது சுதந்திர திருநாள் நடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு குடிமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என எல்லா இடங்களில் சுதந்திர கொடியை மிளிர விட்டுவருகின்றனர். அந்த வகையில் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக வெளிநாடு சென்றுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் அங்கிருந்து தேசிய கொடியை ஏந்தியபடி சுதந்திர தின வாழ்த்துக்களை தெரித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மானின் தாய் மண்ணே வணக்கம் பாடலுடன் பதிவை வெளியிட்டுள்ள விக்னேஷ், " சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே! இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்! உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடுதான்!  என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...வெளிநாட்டு தெருக்களில் நயன்..கிளாமர் உடையில் ட்ரம்ஸ் கலைஞரை ரசிக்கும் விக்கியின் மனைவி

மேலும் செய்திகளுக்கு.. அட..லேடி சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்காங்களே!..வைரலாகும் வாணி போஜனின் நியூ லுக்

கோலிவுட்டின் இளம் தம்பதிகளாக நயன் - விக்கி கடந்த ஜூன் 9 -ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.  நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காதலை கடந்த ஏழு வருடமாக தொடர்ந்த இந்த ஜோடி.  மகாபலிபுரத்தில் கண்ணாடி மாளிகை போல அலங்கரிக்கப்பட்ட திருமண பந்தலில் இவர்களது மணம் முடிந்தது.

ரஜினிகாந்த், மணிரத்தினம், ஷாருக்கான், அனிருத், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி தங்கள் குடும்பத்துடனும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இது குறித்தான புகைப்படங்களை பகிர்ந்த விக்கி தங்களது ஒரு மாத திருமண நாளை புகைப்படங்களோடு கொண்டாடியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு.. ஸ்ரீதேவியுடன் நான்..புலி அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர் சிம்பு தேவன்

 

பின்னர் பலரது எதிர்பார்ப்பும் கேலியும் இவர்களது ஹனிமூன் குறித்து தான். முன்னதாக எங்கு எள்ளும் எண்ணம் இல்லை என கூறியிருந்த இந்த ஜோதி பின்னர் தங்கள் முடிவை மாற்றி தாய்லாந்து பறந்தனர். பின்னர் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்கிய விக்கி மீண்டும் தன மனைவியுடன் உல்லாச பயணம் கிளம்பி விட்டார். இது குறித்து தன மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் விக்கி. 

தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.   அந்த வகையில் தெருவோரம் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் கலைஞரை நயன்தாரா ரசிக்கும் வீடியோவை பகிர்ந்தார் விக்னேஷ் சிவன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!
மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?