வித்தைகாட்டிய விக்கி... என் புருஷனுக்கு இப்படி ஒரு திறமையானு வாயடைத்து போன நயன்தாரா - வைரலாகும் வீடியோ

By Ganesh A  |  First Published Sep 19, 2023, 2:22 PM IST

நடிகை நயன்தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவனின் இசைத்திறமையை பார்த்து வியந்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர் தனுஷ் தயாரித்த நானும் ரெளடி தான் படம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தான் விக்கிக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், காத்துவாக்குல ரெண்டு காதல் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் விக்கி.

நயன்தாராவை 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து வந்த விக்னேஷ் சிவன், கடந்த ஆண்டு அவரை கரம்பிடித்தார். இந்த ஜோடி திருமணமான நான்கே மாதத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில், மகன்கள் பிறந்த பின்னர் அவர்களுடன் முதன்முறையாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார் விக்னேஷ் சிவன்.

Latest Videos

இதையும் படியுங்கள்... அப்பாவாக முதல் பர்த்டே.. அகவை 38ல் மகன்களோடு அடியெடுத்து வைத்த விக்கி - சில்லாக போஸ் கொடுத்த நயன்!

இந்த நிலையில், நேற்று தனது பிறந்தநாளையொட்டி நண்பர்களுக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்துள்ளார் விக்கி. இசையுடன் கூடிய அந்த பர்த்டே பார்ட்டியில் தனக்குள் ஒளிந்திருந்த திறமையை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார் விக்னேஷ் சிவன். மின்னலே படத்தில் இடம்பெறும் வெண்மதி பாடலை இசைக்குழுவினருடன் இணைந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார் விக்னேஷ் சிவன். இதைப்பார்த்த அனைவரும் வாயடைத்து போயினர்.

குறிப்பாக நடிகை நயன்தாரா, என் புருஷனுக்கு இப்படி ஒரு திறமையா என மெர்சலாகிப் போனார். இறுதியில் விக்கியுடன் சேர்ந்து நயன்தாராவும் அந்த பாடலுக்கு வைப் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மூக்கின் மேலே முத்தா.. பக்கம் பக்கமாக காதல் வசனங்கள் - கணவர் மீது பாச மழையை பொழிந்த லேடி சூப்பர் ஸ்டார்!

click me!