என்ன பர்ஃபாமென்ஸ்... வாத்தி கம்மிங் பாடலுக்கு கியூட் ஆட்டம் போட்ட நயன்தாராவின் ரீல் மகள் மானஸ்வி! வீடியோ

Published : May 14, 2020, 04:49 PM IST
என்ன பர்ஃபாமென்ஸ்... வாத்தி கம்மிங் பாடலுக்கு கியூட் ஆட்டம் போட்ட நயன்தாராவின் ரீல் மகள் மானஸ்வி! வீடியோ

சுருக்கம்

'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள, வாத்தி  கம்மிங் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஸ்டைலில் டான்ஸ் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், குழந்தை நட்சத்திரம் பேபி மானஸ்வி செம்ம பர்ஃபாமென்ஸ்சோடு, போட்டுள்ள குட்டி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.  

'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள, வாத்தி  கம்மிங் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஸ்டைலில் டான்ஸ் ஆடி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் நிலையில், குழந்தை நட்சத்திரம் பேபி மானஸ்வி செம்ம பர்ஃபாமென்ஸ்சோடு, போட்டுள்ள குட்டி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகை நயன்தாரா,  இயக்குனர் அஜய் ஞானமுத்து முத்து  இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடித்து வெளியான, 'இமைக்கா  நொடிகள்' படத்தில், நயனுக்கு மகளாக நடித்து... முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரமும் பிரபல காமெடி நடிகர், கொட்டாச்சியில் மகளுமான பேபி மானஸ்வி .

இந்த படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி-க்கு மகளாக இருட்டு, சுட்டு பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தார். அடுத்ததா இவர் நடிப்பில், மாமனிதன், சதுரங்க வேட்டை 2 , உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்: பாடகி கனிகா கபூர் பிளாஸ்மாவை எடுக்க மறுத்த மருத்துவர்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!
 

பேபி மானஸ்வி ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்களை மதிக்காத சிலரை கண்டிக்கும் விதமாக வெளியிட்ட  வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது கருப்பு நிற கியூட் உடையில், சுட்டி தனத்தோடு செம்ம பர்ஃபாமென்ஸ் செய்து 'வாத்தி  கம்மிங்' பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி விஜய் 'கைதி' புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக கை  கோர்த்து நடித்துள்ள  ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்டர் திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் என்றும், அல்லது  தீபாவளிக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் பல தகவல் உலா வருகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்து இதுவரை, தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: வேலைக்காரிக்கு முத்தம்... கணவரை கும்மாங்குத்து குத்திய ஷில்பா ஷெட்டி! வீடியோ!
 

மாஸ்டர் படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் செம்ம ஹிட் ஆகிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும், அடுக்கடுக்காக பல சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: அம்மாவை மிஞ்சும் அழகு... நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேஹாவின் உயர்ந்த லட்சியம்!
 

பேபி மானஸ்வியின் வாத்தி கம்மிங் பாடல் டான்ஸ் இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு