சத்தமில்லாமல் வாரி வழங்கிய விஜய் டிவி... 750 பேருக்கு இன்ப அதிர்ச்சி..!

By Kanimozhi PannerselvamFirst Published May 14, 2020, 3:56 PM IST
Highlights

கடும் பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திலும் விஜய் தொலைக்காட்சி பெப்சி தொழிலாளர்களுக்காக லட்சங்களை வாரி வழங்கியுள்ளது

இந்தியாவில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி  வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ் திரையுலகில் மட்டும் சுமார் 600 கோடி அளவிற்கு முடங்கியுள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: 

ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை பல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உதவி வருகின்றனர். திரைத்துறையை போலவே சின்னத்திரையும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் டி.வி.சேனல்கள் கடும் நஷ்டமடைந்துள்ளன. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

கொரோனா பிரச்சனையால் தொலைக்காட்சிகளுக்கு விளம்பர வருவாய் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடும் பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்திலும் விஜய் தொலைக்காட்சி பெப்சி தொழிலாளர்களுக்காக லட்சங்களை வாரி வழங்கியுள்ளது. பெப்சியைச் சேர்ந்த பல துறை தொழிலாளர்கள் 750 பேருக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை விஜய் தொலைக்காட்சி கொடுத்து உதவியுள்ளது. இதற்காக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் சுமார் 75 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பெப்சி தொழிலாளர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

click me!