வெளியான சிலமணி நேரத்தில் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' பட டீசர் படைத்த புதிய சாதனை..!

Published : Nov 18, 2020, 03:01 PM IST
வெளியான சிலமணி நேரத்தில் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' பட டீசர் படைத்த புதிய சாதனை..!

சுருக்கம்

இந்த படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசரை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் உச்சகமடைந்தனர்.  

கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் நயன் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: 66 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு நிகராக ஃபிட்னசில் கலக்கும் பிரபல நடிகர்..!
 

அப்படி நயன்தாரா நடிப்பில் வெளியான, மாயா ஐரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது தீபாவளி விருந்தாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில்   மரண மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசியல் செய்யும் சாமியார்கள் பற்றியும் இந்த படம் புட்டு புட்டு வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!
 

இந்நிலையில் இன்று தனது 36வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றே ரசிகர்களுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதாவது தனது காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் முதன் முறையாக தயாரித்து, தான் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டீசரை வெளியிடுவது தான் அது. இந்த படத்தில் முதன் முறையாக நயன்தாரா கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். 

இந்த படத்தின் டீசர் சற்று முன்பு வெளியாகியுள்ளது. சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகியுள்ள டீசரை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் உச்சகமடைந்தனர்.

மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு..! என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்..!
 

இந்த டீசர் வெளியாகி சில மணி நேரங்களே ஆகும் நிலையில் முன்னணி ஹீரோக்கள் டீசருக்கு இணையாக ஒட்டு மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு, சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி நயன் ரசிகர்களை மேலும் உச்சகம் அடையச்செய்துள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?