விக்னேஷ் சிவனுடன் எங்கேஜ்மெண்ட் முடிச்சிடுச்சா? நயன்தாராவே சொல்லிட்டாங்க... வைரலாகும் வீடியோ..!!

Published : Aug 10, 2021, 04:20 PM IST
விக்னேஷ் சிவனுடன் எங்கேஜ்மெண்ட் முடிச்சிடுச்சா? நயன்தாராவே சொல்லிட்டாங்க... வைரலாகும் வீடியோ..!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், நயன் - விக்கியை பார்த்து பலரும் கேட்கும் ரிப்பீட்டட் கேள்வி என்றால், எப்போ உங்களுக்கு கல்யாணம் என்பது தான்...? இந்நிலையில் நயன்தாரா, டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இது என்னுடைய எங்கேஜ்மெண்ட் ரிங் என கூறியுள்ளதால் எப்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

தமிழ் சினிமாவில், நயன் - விக்கியை பார்த்து பலரும் கேட்கும் ரிப்பீட்டட் கேள்வி என்றால், எப்போ உங்களுக்கு கல்யாணம் என்பது தான்...? இந்நிலையில் நயன்தாரா, டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் இது என்னுடைய எங்கேஜ்மெண்ட் ரிங் என கூறியுள்ளதால் எப்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இவர்கள் காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது காதலி நயனுடன் இருக்கும் புகைப்படங்களை வேறு பகிர்ந்து முரட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன். 

சினிமாவில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக வேலைகளிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார் தற்போது நயன். மேலும் தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து சாய் வாலா நிறுவனத்தில் ரூ. 5 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேச பட்டு வந்தது.

இதனிடையே நயன்தாராவின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நயனுக்க்கும் - விக்கிக்கும் விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ‘ஒரு வழியா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணப்போறாங்களே’ என ரசிகர்களும் சந்தோஷப்பட்டனர். ஆனால் இதுகுறித்து வேற எந்த தகவலும் தெரிவிக்காமல் இருவருமே தொடர்ந்து வழக்கம் போல் மவுனம் காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி செம்ம பிசியாகி வரும் நயன்தாரா... விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு எந்த அளவுக்கு தீவிர பெண் ரசிகர்கள் உள்ளனர் என்பதை வெளிக்காட்டும் விதத்தில் உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை நயன்தாராவிடம் டிடி கேட்டுள்ளார். அதில் குறிப்பாக நயன்தாராவின் மோதிரம் குறித்து கேட்டதும் இது தன்னுடைய எங்கேஜ்மெண்ட் ரிங் என கூறி நயன் செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.

இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருவதால்... எப்போது இவர்களுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அதே போல், நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனிடம் பிடித்தது, மற்றும் பிடிக்காதது போன்றவற்றையும் கூறியுள்ளார். வரும் ஞாயிறு காலை 10 :30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பாப்பு இப்போதே ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!