படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து... 28 வயது ஸ்டண்ட் கலைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

Published : Aug 10, 2021, 03:43 PM ISTUpdated : Aug 10, 2021, 03:45 PM IST
படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் விபத்து... 28 வயது ஸ்டண்ட் கலைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

சுருக்கம்

விருவிருப்பான சண்டைக் காட்சியை படமாக்கும்போது 28 வயதே ஆன ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விருவிருப்பான சண்டைக் காட்சியை படமாக்கும்போது 28 வயதே ஆன ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் நாயகி இவரா? தீயாக பரவும் தகவல்.!!
 

'லவ் யூ ராச்சு' என்ற கன்னட படத்தின் படப்பிடிப்பு, தற்போது கர்நாடக மாநிலம் அருகே பிடாடி அருகே உள்ள ஜோகேனஹள்ளியில் நடந்து வருகிறது. இந்த படத்தின் அதிரடி சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.  இந்த சண்டைக்காட்சி ஸ்டண்ட் குழுவில் விவேக் என்கிற 28 வயது இளைஞரும் இருந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தங்களுடைய பணியை கவனித்து வந்த போது, எதிர்பாராத விதமாக மின்கம்பி அறுந்து கீழே கிடந்ததை பார்க்காமல் விவேக் அதன் மீது கால் வைத்துள்ளார்.

இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் மற்றொரு  கலைஞருக்கும் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்: பிறந்தநாளில்... உச்ச கட்ட கவர்ச்சியில் எல்லை மீறிய ஹன்சிகா!! பிகினி உடையில் வெளியிட்ட படு மோசமான புகைப்படம்!!
 

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், படக்குழுவினரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடந்ததாகவும், படக்குழு உரிய அனுமதியின்றி பிடாடி-யில்  படப்பிடிப்பு நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக தற்போது இயக்குனர் சங்கர் எஸ். ராஜ், தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே, மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் வினோத் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தப்படத்தில் அஜய் ராவ் என்பவர் கதாநாயகனாகவும், ரசித்தா ராம் என்பவர் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதே போல் ஒரு விபத்து 'இந்தியன் 2 ' படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்தது. அதை தொடர்ந்து கன்னட திரையுலகின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!