
நடிகர் சிம்புவின் 47 ஆவது படமாக உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு 'விண்ணை தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் இணைந்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்கு முதலில் 'நதிகளில் நீராடும் சூரியன்' என பெயர் வைக்கப்பட்ட நிலையில் பின்னர் மாற்றப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சந்தூரில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது சிம்புவுக்கு நாயகியாக நடிக்க கன்னட நடிகை கயடு லோகர் என்பவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இதுகுறித்த ஒப்பந்தம் இதுவரை கையெழுத்து ஆகவில்லை என கூறப்படுகிறது. எனவே விரைவில் இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பை படக்குழு, வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பார்பவர்களையே... இது சிம்புவா என அதிர்ச்சியடைய வைத்தது. பார்ப்பதற்கு மிகவும் சிறியவர் போல காட்சியளித்த சிம்பு... அழுக்கு சட்டை மற்றும் கைலியுடன் தோற்றமளித்தார். எனவே அசுரன் பட பாணியில் இப்படமும் உருவாக உள்ளதாக சில தகவல்கள் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.