நயனின் அவுட்டோர் நயனங்கள்! விக்கி விக்கி அழும் விக்னேஷ் சிவன்: பிரிகிறதா நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணி!

Published : Apr 11, 2019, 11:57 AM IST
நயனின் அவுட்டோர் நயனங்கள்! விக்கி விக்கி அழும் விக்னேஷ் சிவன்: பிரிகிறதா நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணி!

சுருக்கம்

”சாதாரண ஒரு  மனுஷி, தன் புருஷனை தாண்டி வேற ஒருத்தன் கூட பழகி, அது பிரச்னையாச்சுன்னா ‘கள்ளக்காதல் விவகாரம்’ன்னு போடுற மீடியாக்களே, பத்திரிக்கைகளே!...நயன் தாரவின் ஆண் நண்பர்களை பற்றிப் பேசுறப்ப மட்டும் ‘நயனின் காதலர்கள்’ன்னு போடுறீங்க. கல்யாணமாகாத சிம்புவும், விக்னேஷ் சிவனும் நயனின் காதலர்கள் சரி.   

ஃபேஸ்புக்கில் சமீபத்தில் அந்த பெண்ணின் பதிவு செருப்பால் அடிப்பது போல் இருந்தது...

”சாதாரண ஒரு  மனுஷி, தன் புருஷனை தாண்டி வேற ஒருத்தன் கூட பழகி, அது பிரச்னையாச்சுன்னா ‘கள்ளக்காதல் விவகாரம்’ன்னு போடுற மீடியாக்களே, பத்திரிக்கைகளே!...நயன் தாரவின் ஆண் நண்பர்களை பற்றிப் பேசுறப்ப மட்டும் ‘நயனின் காதலர்கள்’ன்னு போடுறீங்க. கல்யாணமாகாத சிம்புவும், விக்னேஷ் சிவனும் நயனின் காதலர்கள் சரி. 

ஆனால் திருமணமாகி மூணு பசங்களைப் பெற்ற பிரபுதேவாவோடு நயன் வெச்சிருந்தது நம்மூர் நியாயப்படி ‘கள்ளக்காதல்’ தானே! குழந்தை குட்டி இருக்கிற ஆண் கூட நம்ம ஊர் பொண்ணுங்க பழகுனா கள்ளக்காதல், ஆனா நயன்தாரா வாழ்ந்தால் அது ‘காதல்’ அப்படித்தானே! 

என்னாங்கடா உங்க நியாயம்?” 

என்பதுதான் அது. லைஸும், ஷேர்ஸும் அள்ளியிருந்த அந்த பதிவுக்கு விழுந்திருந்த ஒரு கமெண்ட் கூட எதிர்மறையாக பேசவில்லை. ‘ஆம் இது சரியான கேள்வியே’ என்றுதான் சொல்கின்றன. 

சரி, இந்தக் நியாயம் இப்ப எதுக்கு? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. விஷயத்துக்கு வருவோம். 

அதாவது கடந்த சில நாட்களாக தமிழக பத்திரிக்கைகளில் ஒரு செய்தி கிசுகிசுப்பாகவும், வெளிப்படையாகவும் வலம் வருகிறது. அது...நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விரிசல் என்பதுதான். 

யெஸ்! இதுவரையில் தான் பழகிய வேறெந்த நபரையும் விட விக்னேஷை மிகவும் லயித்தும், தூய அன்பை பரிமாறியும்தான் நயன் காதலித்தார். ஆனால் சமீப காலமாக இருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகளால் இப்படியான விரிசலாம். குறிப்பாக ராதாரவி, நயனை பேசிய பேச்சுக்கு தாம் தூமென குதித்தார் விக்கி. அவரது ஆதங்கத்துக்கு நியாயமான ரியாக்‌ஷன்கள் கிடைத்தன. நயனுக்கும் மகிழ்ச்சி. 

அதேவேளையில், நயனிடம் ‘போதும்மா நீ நடிச்சது. இப்போ கமிட் ஆகியிருக்கிறதோட முடிச்சுக்க. இனி புதுசா எந்தப் படத்திலும் கமிட் ஆக வேண்டாம். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.’ என்றாராம். அடுத்த நொடியில்...’உங்க அம்மாவோட ஆர்டரா இது?’ என்றாராம் நயன். அப்போ வெடித்த விவகாரம்! இதோ விரிசல் வரை வந்தாச்சு...என்கிறார்கள். 

தன் உயிரை விட பெரிதாய் நினைக்கும் சினிமா நடிப்பை விட்டு விலக சொல்லி விக்கி கூறியதை நயன் தாராவால் தாங்கிக்கவே முடியலையாம். விளைவு, ஓவர் பொசஸிவ் பேர்வழியான விக்கியை கடுப்பேற்றும் வகையில்தான் நயனின் அவுட்டோர் பழக்கவழக்கங்கள் மீண்டும் மாறி இருக்கிறதாம். இது விக்கியின் காதுகளுக்கு வர! அல்லது வேண்டுமென்றே திணிக்கப்பட, பையன் கேவிக் கேவி அழுகிறாராம். 

ஹும் நயன் ஒரு தொடர்கதை!...என்கிறார்கள் க்ளோசப் லைட்மென்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!