’நயன்தாரா பற்றி நான் பேசியது உண்மைதான்’...மீண்டும் வம்பிழுக்கும் ராதாரவி...ஓடி ஒளியும் விக்னேஷ் சிவன்...

By Muthurama LingamFirst Published Apr 11, 2019, 10:23 AM IST
Highlights

’கொலையுதிர் காலம்’பட சர்ச்சைக்குப் பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வகையறாக்களின் கை சற்று இறங்கியிருக்கும் நிலையில் ‘நான் பேசியதில் தவறு இருந்தால் அத்தனை பேர் ரசித்துக் கைதட்டியிருப்பார்களா?’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் நடிகர் ராதாரவி.

’கொலையுதிர் காலம்’பட சர்ச்சைக்குப் பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வகையறாக்களின் கை சற்று இறங்கியிருக்கும் நிலையில் ‘நான் பேசியதில் தவறு இருந்தால் அத்தனை பேர் ரசித்துக் கைதட்டியிருப்பார்களா?’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் நடிகர் ராதாரவி.

நயன்தாரா தொடர்பான சர்ச்சைப் பேச்சுக்குப் பிறகு தி.மு.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சில தினங்கள் மட்டுமே அமைதி காத்த ராதாரவி இரு தினங்களுக்கு முன்பு  'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் கொஞ்சமும் யோசிக்காமல் அவர் நயன்தாராவை மீண்டும் வம்புக்கு இழுத்தார்.

அவ்விழாவில் பேசிய அவர்,”சிங்கம் எப்போதுமே கர்ஜிக்கும். இயக்குநர் பேரரசு பேசுவதை ரசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், இடையே பயந்துவிடாதீர்கள் என்றார். பயம் என்பது தான் எங்களுடைய குடும்பத்திலேயே கிடையாது. எதற்கு பயப்பட வேண்டும்?. ஒரு சிலர் படங்களில்  நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி நிறுத்த முடியும்.

நான் சந்தித்தது ஒரு பிரச்சினையே இல்லை.இதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்பதே கிடையாது. ஏனென்றால் இதெல்லாம் தற்காலிக பிரச்சினை. இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கு இது என்ன ஐ.நா சபை பிரச்சினையா?. நம்ம பேசினதில் உண்மை இருக்கா இல்லையா. அவ்வளவு தான். உண்மை என்றவன் ஏத்துக்குட்டு போ, இல்லை என்கிறவன் விட்டுவிடு. 

நான் பேசும் போது இவ்வளவு பேர் கைதட்டி ஆதரிக்கிறீர்கள். கோபமாக இருந்தால் யாராவது பேசியிருக்கலாம் அல்லவா?. இது தான் அன்றைக்கு 'கொலையுதிர் காலம்' சந்திப்பிலும் நடந்தது. அதை தவறு என்று சொல்கிறார்கள். எப்போதுமே உண்மையைச் சொன்னால் ஆதரிப்பார்கள். 'கொலையுதிர் காலம்' பிரச்சினையின் போதே, யாராவது மனவருத்தப்பட்டிருந்தால், அவர்களிடம் மனவருத்தப்படுகிறேன் என்று சொல்லுங்கள் எனச் சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், கொலை குற்றமா பண்ணிவிட்டேன்” என்று தடாலடியாகப் பேசினார் ராதாரவி.

முன்பு ராதாரவி இதே சர்ச்சைப் பேச்சைப் பேசியபோது கொதித்துக்கொந்தளித்து அடுத்தடுத்து ட்விட் போட்ட விக்னேஷ் சிவன் அடுத்த சிறப்பான சம்பவத்தை ராதாரவி நடத்தி இரண்டு நாளாகியும் மூச் விடவில்லை.

click me!