தனது பிறந்த நாளன்று தல அஜீத் உடைக்கப்போகும் அந்த சஸ்பென்ஸ்...

Published : Apr 11, 2019, 09:35 AM IST
தனது பிறந்த நாளன்று தல அஜீத் உடைக்கப்போகும் அந்த சஸ்பென்ஸ்...

சுருக்கம்

‘நேர்கொண்ட பார்வை’ படம் ரிலீஸாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், அஜீத் அடுத்து நடிக்கப்போகும் பட அறிவிப்பை தனது பிறந்த நாளான மே1ம் தேதி  அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.  

‘நேர்கொண்ட பார்வை’ படம் ரிலீஸாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், அஜீத் அடுத்து நடிக்கப்போகும் பட அறிவிப்பை தனது பிறந்த நாளான மே1ம் தேதி  அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’யின் படப்பிடிப்பு முடிந்து தற்போது முழு ஓய்வில்தான் இருக்கிறார் அஜீத். இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கபோகும் படம் என்ற பெயரில் நான்கு விதமான வதந்திகள் நடமாடுகின்றன. 1.போனிகபூருக்கு அடுத்த படமும் செய்து தருவதாக ஒப்பந்தம் இருப்பதால் இதே இயக்குநர் வினோத்தை வைத்து அடுத்த படம். 2. போனிகபூர் அஜீத்தை இந்தியில் சோலோ ஹீரோவாக அறிமுகம் செய்யவிரும்புவதால் இந்திப்படம்.

3. மங்காத்தா’ சூப்பர் ஹிட் கொடுத்த வெங்கட் பிரபுவுடன் இணைந்து இன்னொரு படம். ’நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பில் இதற்காக அஜீத்தை இருமுறை சந்தித்தார் வெங்கட் பிரபு. நான்காவதாக ‘விஸ்வாசம்’ எதிர்பார்த்ததை விட வசூல் அள்ளியதால் மீண்டும் சிவாவுடன். இந்த 4 செய்திகளையுமே அஜீத் தரப்பு இதுவரை மறுக்கவில்லை.

படம் துவங்கும் சமயம் அஜீத்தின் பிறந்தநாளன்று ‘நே.கொ.பா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்டதால் அப்செட் ஆகியிருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன் இந்த லிஸ்டில் தான் அடுத்து நடிக்கப்போகும் பட அறிவிப்பை தனது பிறந்த நாளன்று அஜீத் அறிவிக்கவிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!