
நதிநீர் இணைப்பு தொடர்பாக தனது பாஜ.க. பாசத்தை சூப்பர் ஸ்டார் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதே கூட்டணியில் இருப்பதால் ‘காலா’ ரஜினியின் ஆதரவும் நமது கழகத்துக்கே என்று அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ புளகாங்கிதமடைந்துள்ளது.
நமது அம்மாவின் அச்செய்தியில்,...பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்’ என்று ‘நமது அம்மா’ இதழ் ரஜினியை வாண்டட் ஆக வண்டியில் ஏற்றியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.